வீட்டில் நிலவும் மகிழ்ச்சியே நாட்டில் பிரதிபலிக்கும்! - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொழிலாளர் தின வாழ்த்து

வீட்டில் நிலவும் மகிழ்ச்சியே நாட்டில் பிரதிபலிக்கும்!
- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொழிலாளர் தின வாழ்த்து


புத்ராஜெயா, ஏப்ரல் 30-
வீட்டில் நிலவும் மகிழ்ச்சியே நாட்டில் பிரதிபலிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொழிலாளர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

 ADVERTISEMENT

கடந்த நூற்றாண்டின் மையப் பகுதிவரை உழைப்பாளர் என்றால், வருமானத்தை ஈட்டும் ஆண்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டனர். இப்பொழுது ஆண் - பெண் இருபாலரும் இணைந்தே எங்கும் பணி புரிகின்றனர். இருந்தாலும், பெண்களுக்கு வீட்டுப் பணி எப்போதும் சுமையாகவே இருக்கிறது. மாறிவரும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் இணைந்துதான் குடும்ப பாரத்தை சுமக்கின்றனர் என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.

ஒவ்வொரு மனிதரும் ஏதோவொரு வகையில், வாழ்க்கையில் உழைப்பை வெளிப்படுத்திய வண்ணமாகத்தான் இருக்கின்றனர். மொத்ததில் குடும்பத்தில் நிலவும் குதூகலம் சமூக வீதியிலும் நாட்டிலும் பிரதிபலிக்கும் என்பதால், உழைப்பிற்கும் குடும்ப மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பதை மே-1 தொழிலாளர் தின சிந்தனையாகக் கொள்வோம் என்று வேதமூர்த்தி சொன்னார்.

மலேசியக் குடிமக்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளை தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் தெரிவித்துக் கொள்வதாக  அமைச்சர் பொன்.வேதமூர்த்தி  குறிப்பிட்டுள்ளார்.

Comments