அமைச்சர் குலசேகரனும் சிவநேசனும் சவாலை ஏற்காததால் இந்திரா காந்தி போராட்டத்திற்கு ம.இ.கா துணை நிற்கும் தகவல் பிரிவுத் தலைவர் வே.குணாளன் அறிவிப்பு

அமைச்சர் குலசேகரனும் சிவநேசனும் சவாலை ஏற்காததால் இந்திரா காந்தி  போராட்டத்திற்கு ம.இ.கா துணை நிற்கும்
தகவல் பிரிவுத் தலைவர் வே.குணாளன் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 5-அமைச்சர் குலாசேகரன் மற்றும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர்  சிவநேசன் ஆகிய இருவரால் நிற்கதியில் விடப்பட்ட இந்திராகாந்தியின் சட்டப் போராட்டங்களுக்கு ம.இ.கா ஆதரவுக்கரம் நீட்டுமென்று அதன் தகவல் பிரிவுத் தலைவர்
வே. குணாளன் கூறினார்.

இந்திராகாந்தியின் இன்றைய நிலைபாடு குறித்து, ரந்தாவில் விவாதிக்க வருமாறு, குலாவுக்கும் சிவநேசனுக்கும்  48 மணி நேரம் காலககெடு விதித்த நிலையில் அந்த சவாலுக்கு பதில் இல்லாததால் குணாளன் மேற்கண்ட அறிவிப்பை செய்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

குலசேகரன் அமைச்சராகவும் சிவநேசன் பேரா ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்ற நிலையில் இந்திரா காந்தி விவகாரத்திற்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், இந்திய சமூகம் பொறுப்புகளை இந்த இருவரும் மறந்து விட்டனர். இந்திராகாந்தியை தங்களின் சுய அரசியலுக்கு ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டது மன்னிக்கக் கூடியதல்ல என்றார் குணாளன்.

இந்திராவின் கணவர் மதமாறியது அவருடைய சுய விருப்பமென்றாலும், அவருடைய குழந்தையை, தாயின் அனுமதியின்றி கட்டாய மதமாற்றம் செய்ததை
ம.இ.கா தொடக்கக் கால முதலே கண்டித்து வந்துள்ளது. ஆனால், இந்த மத விவகாரத்தை ஜசெக  தொடக்க முதலே அரசியல் ஆதாயத்திற்கு, ஆதரவாக குலாவும், சிவாவும் திசைத்திருப்பி வந்துள்ளனர்.
இந்திராகாந்தி எதிர்நோக்கிய வழக்கின் தன்மையைத் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு இருவரும் பயன்படுத்தியதோடு, இன்று அரசாங்கப் பதவிகளிலும் உட்கார்ந்துள்ளனர்,

அதேவேளை இந்திராகாந்தியை நடுத்தெருவில் விட்டு விட்டனர். இந்திரா, இந்த வழக்கில் வெற்றிப் பெற்றிருந்தும், இன்றுவரை தனது குழந்தையை  அவரால் மீட்க முடியாமல்  தவித்து வருகிறார். இதற்கு இன்றைய ஹராப்பான் அரசாங்கத்தின் நிலைபாடுதான் என்ன?  அமைச்சர் பொறுப்பில் இருக்கும் குலசேகரன் இதற்குரிய பதிலைச் சொல்ல வேண்டுமல்லவா? ஏன் அவர் மெளனம் சாதித்து வருகிறார்?
எதற்கெடுத்தாலும் வெற்று அறிக்கைகளைத் தாக்கல் செய்கிற சிவநேசன் , இதுவரை ஏன் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை?

ரந்தாவ் தேர்தலில் வாய் கிழிய பேசவரும் இவர்கள் ம.இ.கா அமைத்து கொடுக்கும்மேடையில் ஏறி  பேச ,துணிவும் திறனுமிருந்தால் வாருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தும், அதற்கு 48 மணிநேர கெடுவிதித்தும், அந்த சாவாலை ஏற்க முடியவில்லையென்றால், இவர்களை என்னவென்று அழைப்பதென்று குணாளன் கேட்டார்.

அதனால் இனி இந்திரா காந்தியின் பிரச்சனையை ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் பிரச்சனையாக ஏற்றுக் கொண்டு, ம.இ.காவின் ஆதரவை இந்திரா காந்திக்கு முழுமையாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். இனி இந்திராகாந்தியின் கணவரையும், அவரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குழந்தையையும் சட்டப்படி எப்படி மீட்டெடுக்க முடியுமோ; அதன்படி ம.இ.கா சட்டப் போராட்டங்களை நடத்தி மீட்டெடுக்கு
மென்று குணாளன் குறிப்பிட்டுள்ளதோடு
இதுவரை இந்திரா
காந்தியை தங்களின் அரசியல் பிழைப்புக்காக ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்துள்ள, குலாவையும், சிவநேசனையும்
அரசியலில் தொடை நடுங்கிகள் என்று தகவல் பிரிவுத் தலைவரான குணாளன் வர்ணித்துள்ளார்.

Comments