ம.இ.கா மீது வீண் குற்றச்சாட்டுகள்!நம்பிக்கை கூட்டணி இந்தியர்களுக்கு பதிலடி கொடுங்கள்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

ம.இ.கா மீது வீண் குற்றச்சாட்டுகள்!நம்பிக்கை கூட்டணி இந்தியர்களுக்கு பதிலடி கொடுங்கள்!
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

        ஆதிரன்

ஜொகூர் பாரு, ஏப்ரல் 7- ம.இ.கா மீது நம்பிக்கை கூட்டணி இந்தியர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுங்கள் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ம.இ.கா மீது நம்பிக்கை கூட்டணியில் இருக்கும் இந்தியர்கள் பழி சுமத்தி, வசை பாடி வருகின்றனர். இதை நிறுத்த ஆங்காங்கே இருக்கும் ம.இ.கா தலைவர்கள்  பதிலடி கொடுக்க வேண்டும். ம.இ.கா மீது அவதூறு பரப்புவோர் சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ம.இ.கா  எந்த காலத்திலும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு
துரோகம் செய்தது கிடையாது. ஒரு காலகட்டத்தில் ம.இ.காவுக்கு எந்த நிதியும் வந்தது கிடையாது. இதனால், இந்திய சமுதாயத்திற்கு நிதியுதவி செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் டத்தோஸ்ரீ நஜிப் காலத்தில் ம.இ.காவுக்கு நிதியுதவி கிடைத்தது. ம.இ.கா போல் தேசிய முன்னனிக்கு ஆதரவாக இருந்த மற்ற இந்திய கட்சிகளும் நிதியுதவி பெற்றன. இதனால் கடந்த காலங்களில் ம.இ.காவுக்கு நிதி வந்தது. இதனை இவர்கள் திருடி விட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

இதனை இந்திய சமுதாயம் உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இந்நிலையில் பாஸ் கட்சியுடன் ம.இ.கா கொண்டுள்ள உறவானது ம.இ.காவை வலுப்படுத்தவேயன்றி வேறு காரணம் இல்லை. பாஸ் கட்சியினால் மலேசிய இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இதுவரை பாஸ் கட்சியினர் எந்த ஆலயத்தையும் உடைத்தது கிடையாது. கிளந்தான் மாநிலத்தை 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாஸ் கட்சி எந்த ஆலயத்தையும் உடைத்ததில்லை. இந்து சமய வழிபாட்டிற்கு தடையாக இருந்ததில்லை.

பாஸ் கட்சியுடன் ம.இ.கா கொண்டுள்ள உறவானது ம.இ.காவை ஒரு வலுவான கட்சியாக உருவாக்கி எதிர்காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு நன்மையைக் கொண்டு வரும். நாட்டின் அடுத்த பொதுத்தேர்தலில் ம.இ.கா எல்லா நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் வெற்றி பெறுவதற்குரிய நடவடிக்கையில் இறங்க பாஸ் கட்சியுடனான நல்லுறவு வகை செய்யும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.

ம.இ.கா மறுசீரமைக்கப்படும் அதேவேளையில் ம.இ.கா உறுப்பினர்கள் அடையாளம் முடுக்கிவிடப்படும். அடுத்த பொதுத்தேர்தலை நோக்கி பயணிக்கும் நடவடிக்கையில் ம.இ.கா இறங்கும் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியை ஜொகூர் ம.இ.கா தலைவர் வித்யானந்தன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்து நிகழ்வில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் 50 ஆயிரம் வெள்ளியை 5 நிகழ்ச்சிகளுக்கு பிரித்து கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

இதில் மாநில ம.இ.கா துணைத் தலைவர் திரு.சுப்பையா, தேசிய முன்னனி தலைவர், மசீச மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments