ராகாவில் ‘அப்படி இப்படி எப்படி’ நிகழ்ச்சியில் ராம், ஆனந்தா

ராகாவில் ‘அப்படி இப்படி எப்படி’ நிகழ்ச்சியில் ராம், ஆனந்தா

கோலாலம்பூர், ஏப்ரல் 4-டிஎச்ஆர் ராகா வானொலியில் நன்கு அறிமுகமான ஆனந்தா, மற்றும் ராம் மீண்டும் இணைந்து நிகழ்ச்சி படைக்கவிருக்கின்றனர்.

ராகாவில் ‘அப்படி இப்படி எப்படி’ எனும் புத்தம் புதிய நிகழ்ச்சி ஏப்ரல் 6-ஆம் தேதி தொடக்கம் ஒலியேறவுள்ளது. இந்நிகழ்ச்சியை ராம், ஆனந்தா இருவரும்
தொகுத்து வழங்கவுள்ளனர். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, காலை 6.00 மணி தொடக்கம் 10 மணி வரையில் ஒலியேறவுள்ள இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் தங்களுடைய வார இறுதி நாட்களைச் சிறப்பாக கழிக்க பல அரிய விஷயங்கள் கலந்துரையாடுவார்கள்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ராம், ஆனந்தா மீண்டும் இணைந்து ராகாவில் நிகழ்ச்சி படைக்கவிருக்கின்றனர். ‘அப்படி இப்படி எப்படி’ நிகழ்ச்சியில் வார நாட்களில் அண்மையச் செய்திகள் மற்றும் சமூக வளத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்ட சம்பவங்கள் என பல அறிய தகவல்களைத் தொகுத்து வழங்குவார்கள்.

இதைத் தவிர்த்து, மலாய் மற்றும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்ட தமிழ்த் திரைப்பட பாடல்களை ரசிகர்கள் பாடுவதை இந்நிகழ்ச்சியில் கேட்கலாம். இந்நிகழ்ச்சியின் வழி ரசிகர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு பிறந்தநாள், திருமணம் போன்ற வாழ்த்துகள் தெரிவிக்க விரும்பினால், ராகாவின் Whatsapp எண்களுக்கு அனுப்பி வைக்கலாம். ராம், ஆனந்தா  தொடர்ப்பு கொண்டு உங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு அதனை வானொலியில் ஒலிபரப்புவார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு, ராகாவின் raaga.my அதிகாரப்பூர்வ அகப்பக்கம், முகநூல் அல்லது ராகா வானொலி வழி தெரிந்து கொள்ளலாம்.

Comments