ரந்தாவ் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றால் மக்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வருவேன்! டாக்டர் ஸ்ரீராம் வாக்குறுதி

ரந்தாவ் சட்டமன்றத்தில்  வெற்றி பெற்றால் மக்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வருவேன்!
டாக்டர் ஸ்ரீராம் வாக்குறுதி

ஆதிரன்

ரந்தாவ், ஏப்ரல் 10-
ரந்தாவ் சட்டமன்றத் இடைத்தேர்தலில்   வெற்றி பெற்றால் கண்டிப்பாக மக்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்
டாக்டர் ஸ்ரீராம் வாக்குறுதியளித்துள்ளார்.


ரந்தாவ் தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன. இதில் குறிப்பாக வேலை வாய்ப்பு, வீடமைப்புத் திட்டம், வெள்ளப் பிரச்சினை, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு ரந்தாவ் மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தித் தருவேன் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய தொலைப்பேசி உரையாடலில் டாக்டர் ஸ்ரீராம் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ரந்தாவ் தொகுதியில் இதுவரை பெரிய மேம்பாடுகள் இல்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வட்டாரத்தில் உள்ள இந்திய வாக்காளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகின்றனர். ஆகையால், ஆட்சி பீடத்தில் இருக்கும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரான தம்மை வெற்றி்பெறச் செய்தால் கண்டிப்பாக மேம்பாடுகளைக் கொண்டு வருவேன் என்றார் டாக்டர் ஸ்ரீராம்.


மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் நம்பிக்கை கூட்டணி வசம் இருப்பதால் கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இந்திய மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து பிரச்சினைகளை கண்டறிந்து வருகுறேன். பலர் பலவிதமான பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்தனர். இந்த பிரச்சினைகளுக்கு மாநில அரசாங்கம் மனது வைத்தால்தான் தீர்வு காண முடியும் என்பதால் இதனை நம்பிக்கை கூட்டணி வேட்பாளரான தம்மால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று டாக்டர் ஸ்ரீராம் சொன்னார்.


ரந்தாவ் இடைத்தேர்தல் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் டாகடர் ஸ்ரீராம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீராமுக்கு ஆதரவாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டத்தின்ஸ்ரீ வான் அஸிசா, ரபிசி, அமைச்சர் குலசேகரன், அமைச்சர் கோவிந்த் சிங் டியோ, லிம் கிட் சியாங், அமைச்சர் மாட் சாபு, மாநில மந்திரி பெசார் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments