அமைச்சர் அதிகாரத்தில் இருந்தும் இந்திரா காந்தி முன்னாள் கணவரை ஏன் பிடிக்க முடியவில்லை? குலசேகரனுக்கு ம.இ.கா வே.குணாளன் கேள்வி

அமைச்சர் அதிகாரத்தில் இருந்தும் இந்திரா காந்தி முன்னாள் கணவரை ஏன் பிடிக்க முடியவில்லை?
குலசேகரனுக்கு ம.இ.கா  வே.குணாளன் கேள்வி

ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 8-
நம்பிக்கை கூட்டணியில் அமைச்சர் அதிகாரத்தில் இருக்கும் நிலையில் இந்திரா காந்தி விவகாரத்தில் செயல்பட முடியாதது குலசேகரனின் பலவீனத்தை காட்டுவதாக தேசிய ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர் வே.குணாளன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

அமைச்சர் அதிகாரத்தில் இருந்து கொண்டு இந்திராவின் முன்னாள் கணவரை தேடிப்பிடிக்க முடியாதது ஏன்? பத்மநாபன் என்ற முகமட் ரிட்சுவானை கைது செய்து பிள்ளையை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அமைச்சரவையில் இருக்கும் குலசேகரன் அதனை செயல்படுத்த முடியாதது ஏன் என்று சிப்பாங் ம.இ.கா தொகுதி தலைவருமான வே.குணாளன் கேள்வி எழுப்பினார்.

இது இந்திராவின் பிரச்சினையல்ல. இந்திய சமுதாய பிரச்சினை. இந்தியர்கள் குலசேகரனுக்கு நம்பி வாக்களித்து நாடாளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் அனுப்பி வைத்த மக்களை இப்படி வஞ்சிக்கலாமா? இந்திய சமுதாய பிரச்சினையை அமைச்சரவையின் பார்வைக்கு கொண்டுச் செல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சர் குலசேகரனுக்கு உண்டு என்பதால் இந்திரா காந்தி விவகாரத்தில் கைகழுவி விடாமல் ரிட்சுவானை தேடிப்பிடித்து கைது செய்ய வேண்டிய நடவடிக்கைகளை குலசேகரன் மேற்கொள்ள வேண்டும் என்று வே.குணாளன் வலியுறுத்தியுள்ளார்.

Comments