இந்திய மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் விவகாரம் பிரதமர் துன் மகாதீர் விரைவில் தீர்வை அறிவிப்பார் அமைச்சர் வேதமூர்த்தி தகவல்

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் விவகாரம்
பிரதமர் துன் மகாதீர் விரைவில் தீர்வை அறிவிப்பார்
அமைச்சர் வேதமூர்த்தி தகவல் 

குணாளன் மணியம் 

புத்ராஜெயா, ஏப்ரல் 17-
இந்திய மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் விவகாரம் தொடர்பில்  பிரதமர் துன் டாக்டர். மகாதீர் முகமட் விரைவில் அதற்கான தீர்வை அறிவிப்பார் என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்திய மாணவர்கள் பலர் 10ஏ, 11ஏ தேர்ச்சி பெற்ற போதிலும் அவர்களுக்கு  மெட்ரிக்குலேசன் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து பலர் சமூக வலைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இதில் மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் மெட்ரிக்குலேசன் விவகாரம் தொடர்பில்  தாம் அமைச்சரவையில் விவாதித்ததாகவும் பிரதமர் துன் மகாதீர் இது தொடர்பில் விரைவில் தீர்வை அறிவிப்பதாகவும் தெரிவித்ததாக பிரதமர் துறை அமைச்சருமான வேதமூர்த்தி சொன்னார்.

மெட்ரிக்குலேசன் கல்வி வாய்ப்பு கிடைக்காத இந்திய மாணவர்களின் நிலை குறித்து இன்று ஏப்ரல் 17 அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் சிறந்தத் தேர்ச்சி பெற்றிருந்தும் மெட்ரிக்குலேசன் வாய்ப்பு கிடைக்காத அதிகமான இந்திய மாணவர்கள் தடுமாறி நிற்கும் நிலை குறித்து இந்திய சமுதாயத்தில் குறைகூறலும் அதிருப்தியும் நிலவியது குறித்து அமைச்சரவையில் எடுத்துரைக்கப்பட்டதாக வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினை குறித்து பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. இந்தச் பிரச்சினை தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும் பரிசீலித்து பொருத்தமான முடிவை விரைவில் அறிவிப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தம்மிடம் தெரிவித்ததாக  செனட்டர் பொன்.வேதமூர்த்தி மேலும் கூறினார்.

Comments

  1. Sir,we stand for justice to get seat for all high score Indian students no matter how many students. All Indian high score students must enter Matriculation. No need to see quota. Because this is one of the where indians being for past years. Resulted we have high number of criminal record

    ReplyDelete

Post a Comment