மெட்ரிகுலேசன் கல்விக்கு கோட்டா முறை இடஒதுக்கீட்டில் இருந்ததை இழந்து விட்டோம்! இந்திய மக்கள் சிந்திக்க வேண்டும் -டத்தோ எம்.சம்பந்தன்

மெட்ரிகுலேசன் கல்விக்கு கோட்டா முறை இடஒதுக்கீட்டில் இருந்ததை இழந்து விட்டோம்!
இந்திய மக்கள் சிந்திக்க வேண்டும்
-டத்தோ  எம்.சம்பந்தன்

ஆதிரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 26-
மெட்ரிகுலேசன் இடங்கள் 40 ஆயிரமாக  அதிகரிக்கப்பட்டிருந்தாலும் கோட்டா முறை இடஒதுக்கீட்டில் இந்திய சமுதாயம் இருந்ததை இழந்து விட்டது என்று ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் சாடியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

டத்தோஸ்ரீ நஜிப் தலைமையிலான கடந்த அரசாங்கம் 2,200 மெட்ரிகுலேசன் இடங்களை வழங்கியது. நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 90-10 என்ற கோட்டா முறையில் நமக்கு கேட்டது கிடைக்கவில்லை என்று டத்தோ சம்பந்தன்  கூறினார்.

கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மெட்ரிகுலேசன் இடங்கள் 25 ஆயிரத்தில் இருந்து  40 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் 90-10 கோட்ட முறை நிலைநிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அப்படியானால் 2,500 இடங்கள்தான் அந்த 10 விழுக்காடு. 36,500 இடங்கள் பூபிபுத்ராக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உது கண்துடைப்பு வேலையா?

இந்திய சமுதாயம் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பில் நமக்கு 1,500 இடங்கள்தான் கிடைக்கும். முந்தைய அரசாங்கம் வழங்கிய 2,200 இடங்கள்  பறிபோய் விட்டன. இந்திய மாணவர்கள் அதிகமாக மருத்துவ துறையில் படிக்கிறார்கள். இந்த அறிவிப்பினால் அந்த வாய்ப்பு பறிபோய் விட்டது வேதனையளிக்கிறது என்றார் சம்பந்தன்.

இந்திய சமுதாயம் இதனை சிந்திக்க வேண்டும். அரசாங்கம் வழங்கியதை நாம் இழக்காமல் சிந்தித்து செயல்படுவோம். இந்திய சமுதாயத்தின் அடுத்த இலக்கு என்ன என்பதை ஆராய வேண்டும். கட்சி பேதமில்லாமல் அமர்ந்து பேச வேண்டும். நம்பிக்கை கூட்டணி இந்திய அமைச்சர்கள், ம.இ.கா, ஐபிஎப், மக்கள் சக்தி, கிம்மா ஆகியவை விவாதித்து ஒற்றுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஆகையால், இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் இடங்களை 2,200 ஆக நிலை நிறுத்த அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்று செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Comments