ஜிஞ்சாங் உத்தாரா ரூமா பஞ்சாங்கைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு ஸ்ரீ அமானில் பிபிஆர் வீடு வழங்கப்பட்டுள்ளது! வாடகை அதிகம் காரணமாக அங்கு குடியேறவில்லை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் விளக்கம்

ஜிஞ்சாங் உத்தாரா ரூமா பஞ்சாங்கைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு ஸ்ரீ அமானில் பிபிஆர் வீடு வழங்கப்பட்டுள்ளது!
வாடகை அதிகம் காரணமாக அங்கு குடியேறவில்லை
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் விளக்கம்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 9-
ஜிஞ்சாங் உத்தாரா ரூமா பஞ்சாங்கைச் சேர்ந்த ஜெகநாதன் கிருஷ்ணன் என்பவருக்கு ஜிஞ்சாங் உத்தாரா ஸ்ரீஅமானில் பிபிஆர் வீடு வழங்கப்பட்டுள்ள நிலையி்ல் வாடகை அதிகம் காரணமாக அங்கு குடியேறவில்லை் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் விளக்கமளித்துள்ளார்.

இந்த ஸ்ரீ அமான் பிபிஆர் வீட்டிற்கு வாடகை 250 வெள்ளியாக இருப்பதால் அதனை மாற்றி 124 வெள்ளி விலையில் மாற்று வீடு வழங்க உதவும்படி சில வாரங்களுக்கு முன்பு தம்மை அணுகியதாகவும் போதிய ஆவணங்களுடன் தம்மை சந்திக்கும்படி ஆலோசனை கூறியிருந்ததாகவும் தேசம் வலைத்தளத்திடம் பிரபாகரன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்நிலையில் அண்மையில் ஜிஞ்சாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  ஜெகநாதனுக்கு மாற்று  வீடு வழங்க வேண்டும் என்று ஒருவர் சமூகவலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளார்.


அவரது காணொளி ஜெகநாதனுக்கு அறவே வீடு வழங்கப்படவில்லை  எனும் தோரணையில் இருந்தது. அது முற்றிலும் பொய்யான தகவல் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

ஜெகநாதனுக்கு கடந்த 15.10.2018 இல் ஸ்ரீஅமான் பிபிஆர் வீடமைப்பில் 250 வெள்ளி வாடகையில் வீடு வழங்கப்பட்டிருந்தது.


ஆனால், அந்த வீட்டிற்கு 250 வெள்ளி வாடகை செலுத்த முடியாத நிலையில் 124 வெள்ளி வாடகை வீட்டை பெற்றுத்தரும்படி என்னிடம் உதவி கோரியிருந்தார்.

மாநகர்மன்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட வீட்டை மாநகர் மன்றத்திடம் திரும்ப ஒப்படைத்து விட்டுதான் 124 வெள்ளி வாடகை வீட்டுக்கு மனு செய்ய முடியும். அதற்கு ஜெகநாதன் நேரில் மாநகர் மன்றத்திற்கு வர வேண்டும்.


ஜெகநாதனிடம் சில ஆவணங்களை தமது அதிகாரிகளிடம் வழங்கும்படி கூறியிருந்தேன். வீட்டில் அம்மை கண்டிருப்பதால் விரைவில் ஆவணங்களை வழங்குவதாக ஜெகநாதன் கூறியிருந்தார்.

இதுவரை எந்த ஆவணமும் வராத நிலையில் ஒருவர் வீடு அறவே கிடைக்காதது போல் சமூகவலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளார். அது முற்றிலும் பொய்யான தகவல். இதுதொடர்பில் தமது அதிகாரி மீண்டும் சென்று கேட்ட போது தமக்கு வீடு கிடைத்ததை ஜெகநாதன் ஒப்புக் கொண்டார்.

இதுதான் உண்மை நிலவரம் என்பதால் அந்த காணொளி தகவல்களை நம்ப வேண்டாம் என்று கூறிய பிரபாகரன், ஜெகநாதன் ஆவணங்களை வழங்கிய பிறகு அவருக்கு 124 வெள்ளி வாடகையில் வீடு பெற்றுதர உதவுவோம் என்று பிரபாகரன் குறிப்பிட்டார்.

Comments