பொன்னமராவதி தேசம் செய்தியாளர் இரா.பாஸ்கர் வேண்டுகோளை ஏற்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மிராசு மோகன் குடும்பம் பிரிண்டர் சாதனம் வழங்கியது பொன்னமராவதி தேசம் வலைத்தளம் நன்றி

பொன்னமராவதி தேசம் செய்தியாளர் இரா.பாஸ்கர்  வேண்டுகோளை ஏற்று
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு  மிராசு மோகன் குடும்பம் பிரிண்டர் சாதனம் வழங்கியது
பொன்னமராவதி தேசம்  வலைத்தளம் நன்றி

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

பொன்னமராவதி, ஏப்ரல் -
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய கொன்னத்தான்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு பிரிண்டர் சாதனம் வழங்கிய மிராசு மோகன் குடும்பத்திற்கு பொன்னமராவதி தேசம் வலைத்தளம் நன்றி கூறுவதாக அதன் செய்தியாளர் இரா.பாஸ்கர் தெரிவித்தார்.

கொன்னத்தான்பட்டி நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் பாலமுருகன் அப்பள்ளிக்கு உதவி தேவை என்று தன்னிடம் கேட்டதாகவும்   இதடையடுத்து இச்செய்தியை தேசம் வலைத்தளம் வாயிலாக  வெளியிட்டதாகவும் இச்செய்தியை
படித்த சில நிமிடங்களிலேயே சிவகங்கை மாவட்டம் மாந்தக்குடிப்படியை சேர்ந்த மிராசு மோகன் குடும்பத்தினர் தாமாகவே முன்வந்து அப்பள்ளிக்கு தேவையான 10 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள  பிரிண்டர் சாதனத்தை  வழங்கியதாகவும் இரா.பாஸ்கர் சொன்னார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த பிரிண்டர் சாதனத்தை பெற்றுக் கொண்ட அப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். இந்த பிரிண்டர் சாதனத்தை வழங்கிய மிராசு மோகன் கூறுகையில் கொன்னத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் இத்தகைய உதவி செய்திட தமக்கோரு வாய்ப்பளித்த அப்பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு  எனது குடும்பத்தினரின் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக சொன்னார்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் கல்விக்கு தேவையான பிரிண்டர் சாதனத்தை வழங்கியுள்ளதானது மனிதநேயத்தை மேலோங்க செய்துள்ளது. இந்த
வேளையில் மோகன் குடும்பத்தினருக்கும், பொன்னமராவதி தேசம் வலைத்தள செய்தியாளர் இரா.பாஸ்கர், தேசம் தோற்றுநர், தேசம் பத்திரிகை, தேசம் வலைத்தளம், தேசம் தொலைக்காட்சி  தலைமையாசிரியர் திரு.குணாளன் மணியம் அவர்களுக்கும் கொன்னத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் சார்பில் பள்ளியின்  தலைமையாசிரியர் பாலாமணி  நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள்
இந்திரா லெட்சுமி, வசந்தா, சித்ரா,
நூர் நிஷா, வெண்ணிலா, ஆனந்தி,   பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் முத்துமாரியப்பன் அனைவருக்கும்  நன்றி கூறினார்.

Comments