இலங்கையில் தமிழின மக்கள் படுகொலை! லண்டனில் 10ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கையில் தமிழின மக்கள் படுகொலை! லண்டனில் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் 

லண்டனில் இருந்து நமது தேசம் நிருபர்

லண்டன், மே 20-
கடந்த  மே 18ஆம் நாள் 2009 வலி சுமக்கும் நாள். ஈழத்தில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை இலங்கை அரசு இரக்கமின்றி கொன்று குவித்தது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த கரிய நாளை நினைவு கூறும் வகையில் உலகமெங்கும் புலம்பெயர் தமிழ் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவகையில் லண்டனிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்  ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியதோடு போர்க்குற்றங்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

“தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரனே”, “தமிழீழம் விரைவில் கிடைக்கும்”, மற்றும் “இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும்” என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் முறையாக பிரித்தானிய தேசியக் கொடியை தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியான புலிக்கொடியும் ஏற்றி நினைவு தீபம் ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments