யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பெற்றோர்கள் அணுக்கமான உறவை கொண்டிருக்க வேண்டும் ஸ்ரீ முருகன் கல்வி மையம் 10 வாரங்களுக்கு "கல்வி ஜெயம்" கருத்தரங்கம் -இயக்குநர் சுரேந்திரன் கந்தா

யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பெற்றோர்கள் அணுக்கமான உறவை கொண்டிருக்க வேண்டும்
ஸ்ரீ முருகன் கல்வி மையம் 10 வாரங்களுக்கு  "கல்வி ஜெயம்" கருத்தரங்கம் 
-இயக்குநர் சுரேந்திரன் கந்தா 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 27-
பெற்றோர்கள் -மாணவர்கள் இடையில் ஏற்படும் அணுக்கமான  உறவு மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத உதவும்  என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேந்திரன் கந்தா கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

பெற்றோர் - மாணவர்கள் உறவு வலுப்பெறுவதன் வழி யூபிஎஸ்ஆர் மாணவர்கள் தத்தம் பெற்றோரின் ஆதரவுடன் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று சுரேந்திரன் தெரிவித்தார்.

ஸ்ரீ  முருகன் நிலைய பிரிக்பீல்ட்ஸ் கல்வி மையத்தின் ஏற்பாட்டில் யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான "கல்வி ஜெயம்" கருத்தரங்கில்  செய்தியாளர்களிடம் சுரேந்திரன் கந்தா அவ்வாறு சொன்னார்.

பெற்றோர்கள் வழக்கமாகவே தங்கள் பிள்ளைகளுடன் அணுக்கமான உறவை கொண்டிருக்க  மாட்டார்கள். வேலை, வேலை என்று இருக்கும் பெற்றோர்கள் தங்கள் போக்கை மாற்றி, பிள்ளைகளுடன் இத்தகைய கருத்தரங்கில் கலந்து கொண்டு தேர்வு குறித்து பேச ஆரம்பித்தாலே அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தேர்வில் கவனம் செலுத்தி படிப்பார்கள் என்றார் சுரேந்திரன்.

மலாயா பல்கலைக்கழகத்தில் மே 26 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடங்கி மாலை 5.00 மணிவரையில் பெற்றோர்களும் மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து யூபிஎஸ்ஆர் தேர்வு குறித்து தெரிந்து கொண்டனர். இதன்வழி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின்  தேர்வு கேள்விகள் குறித்து தெரிந்து கொண்டால் மாணவர்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்று சுரேந்திரன் குறிப்பிட்டார்.

ஸ்ரீ முருகன் கல்வி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக பெற்றோர்கள்-மாணவர்கள் கலந்து கொள்ளும் "கல்வி ஜெயம்" கருத்தரங்கை நடத்தி வருகிறது. ஸ்ரீ முருகன் கல்வி மையம்தான் முதல் முறையாக இத்திட்டத்தை தொடங்கியது. மாணவர்கள்-பெற்றோர்கள் உறவை வலுப்படுத்தவே இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து 10 வாரங்களுக்கு "கல்வி ஜெயம்" கருத்தரங்கம் நடத்தப்படும் என்று சுரேந்திரன் கூறினார்.

Comments