எம்.ஜி.விஜயின் "துணிந்து நில்" ஆடியோ சிடிக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வெ.10 ஆயிரம் வழங்கினார்

எம்.ஜி.விஜயின் "துணிந்து நில்" ஆடியோ சிடிக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வெ.10 ஆயிரம் வழங்கினார்

கோலாலம்பூர், மே 24-
மலேசிய கலைத்துறையில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டுள்ள
எம்.ஜி.ஆர் விஜயசேகர் புதல்வர் எம்.ஜி.விஜய் தயாரித்துள்ள "துணிந்து நில்" ஆடியோ சிடியை ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்  10 ஆயிரம் வெள்ளி வழங்கி முதல் ஆடியோ சிடியை பெற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

எம்.ஜி.விஜயின் "துணிந்து நில்" ஆடியோ சிடியில் இடம்பெற்றுள்ள பாடல்களை கேட்ட டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் விஜய்யை பாராட்டியதோடு விரைவில் இசைக் கல்லூரியை தொடங்கவிருப்பதாகவும் அதற்கான ஆயுத்த வேலைகளில் விரைவில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு செய்தார்.


இந்த "துணிந்து நில்" ஆடியோ சிடி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் எம்.ஜி.விஜய் எழுதியுள்ள "துணிந்து நில்" ஆடியோ சிடி பாடல் வரிகளை வெகுவாகப் பாராட்டினார். மலேசிய கலைஞர்கள் திறமைக்கு எம்.ஜி.விஜய்யின் ஆடியோ சிடி ஒரு சான்று என்று பரத்வாஜ் சொன்னார்.


இசைக் கல்லூரி அமைக்கத் திட்டமிட்டுள்ள டான்ஸ்ரீ விக்னேஷ்வரனின் முயற்சியை பரத்வாஜ் வெகுவாக பாராட்டினார். டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மலேசிய கலைஞர்கள் மீது கடப்பாடு கொண்டுள்ளார். மலேசிய கலைஞர்களுக்கு டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அமைக்கும் இக்கல்லூரி ஒரு பாலமாக அமையும் என்றார் அவர்.

இந்த "துணிந்து நில்" ஆடியோ சிடியில் "என்னடா செய்வீங்க", "என்னம்மா" பாடல்கள் மிகவும் பாராட்டுக்குரிய பிரபலமான பாடல்களாக பேசப்பட்டன.


இந்த நிகழ்வில் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் தினாளன் ராஜகோபாலு, மலேசிய கலைஞர்கள், ரசிகர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.


Comments