மலேசியாவில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கபட்ட திரைப்படம் "உனக்காகதானே" 130 கலைஞர்கள், 30 தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்

மலேசியாவில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கபட்ட திரைப்படம் "உனக்காகதானே"
130 கலைஞர்கள், 30 தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்

குணாளன் மணியம்

கிள்ளான், மே 24-
மலேசியாவில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கபட்ட "உனக்காகதானே" திரைப்படம்  வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய கலைத்துறை வரலாற்றில் முதல்முறையாக 130 கலைஞர்கள் நடித்துள்ள "உனக்காகதானே" திரைப்படத்தில் 30 தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளிவரும் என்று எஸ்.பி.ஸ்ரீகாந்த் சொன்னார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

"உனக்காகதானே" திரைப்படம் இரண்டு ஆண்டுகள் சத்தமில்லாமல் தயாரிக்கப்பட்டு வந்தது.  இதன் நாயகனாக சிவசங்கர் கிருஷ்ணன் அறிமுகமாகிறார். ராஜேந்திரன் கலைதாசன் நடித்துள்ளார்.
 இதில் யாஸ்மின் நதியா நாயகியாக நடித்துள்ளார்.

இதில் மேலும் குணசேகரன், கோகிலா, சந்திரன், சீன இயக்குனரும் நடிகருமான கெஞ்சி சவாஹி ஆகியோருடன் இணைந்து 130 கலைஞர்கள்  நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் தொழில்நுட்ப வேலைகளை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 30 தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.

இம்மோர்த்தால் புரோடாக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் கராத்தே மாஸ்டர்  கோகிலவாணி தயாரித்துள்ள "உனக்காகதானே" திரைப்படக்குழுவினர் புத்தம் புதிய திரைப்படக்குழுவினர் ஆவர். இத்திரைப்படத்தின் பெயர் அறிமுகவிழா கடந்த மே 23 வெள்ளிக்கிழமை கிள்ளான், போட்டானிக் ரிசோர் கிளப்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

"உனக்காகதானே" திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோகிலவாணி, இயக்குநர் எஸ்.பி.ஸ்ரீகாந்த் மலேசிய திரைபடத்துறைக்கு புதியவர்கள். யார் இவர்கள்?
செய்தி கட்டுரை தொடரும்...

Comments