பாலியல் தொல்லை கொடுத்தாரா பேரா நாடாளுமன்ற உறுப்பினர்? பிகேஆர் கட்சியின் முன்னாள் பொருளாளர் காவல் துறையில் புகார்

பாலியல் தொல்லை கொடுத்தாரா பேரா நாடாளுமன்ற உறுப்பினர்?
பிகேஆர் கட்சியின் முன்னாள் பொருளாளர் காவல் துறையில் புகார்

நந்தகுமார்- மலேசியா கினி

கோலாலம்பூர், மே 17-
"என் அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்" என்று கைப்பேசி வழி பாலியல் தொல்லை கொடுத்ததாக பேரா மாநில பிகேஆர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

அந்த புகாரை செய்த பெண் பிகேஆர் கட்சியின் முன்னாள் பொருளாளர் என்று தெரிகிறது. இந்த பாலியல் தொல்லை கடந்த டிசம்பரில் இருந்து நடந்து வருவதாக பூச்சோங்கை சேர்ந்த ஒரு வழக்கறிஞரான அப்பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கும் அவரும் இப்பெண் கைப்பேசிக்கு அழைத்து தொல்லை கொடுப்பதாகவும் ஆபாச படங்களை அனுப்புவதாகவும் இதனால் தமக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி காவல் துறையில் புகார் செய்துள்ளார்.

இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை. அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை "மலேசியா கினி" வெளியிடவில்லை. இதுகுறித்து கட்சி தலைமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாய்திறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் அப்பெண் கடந்த மே 16ஆம்  தேதி புகார் செய்துள்ளார்.கடந்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு அப்பெண் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேலை செய்து வந்துள்ளார்.

இதன்பிறகுதான் காமகாளியாட்டம் தொடங்கியதாம். "அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்" என்று வாட்ஸ்ஆப் குறுந்தகவல் அனுப்புவாராம். இது இப்படி இருக்க அப்பெண் கைப்பேசியில்  ஆபாசப் படங்களை அனுப்பியதோடு பலமுறை அழைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக மே 4ஆம் தேதி காவல் துறையில் புகார் செய்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை காவல் துறை விசாரித்து உண்மையை வெளியிட்டால்தான் உண்மையான விஷயத்தை கண்டுபிடிக்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments