அடிரா கால்பந்து கிளப் ஏற்பாட்டில் பெனால்டி கிக் லீக் போட்டி முதல் பரிசு வெ.2 ஆயிரம் மே 14ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்

அடிரா கால்பந்து கிளப் ஏற்பாட்டில் பெனால்டி கிக் லீக் போட்டி
முதல் பரிசு வெ.2 ஆயிரம்
மே 14ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்

கோலாலம்பூர், மே 13-
அடிரா கால்பந்து கிளப் ஏற்பாட்டில் பெனால்டி கிக் லீக் போட்டி 2 ஆயிரம் வெள்ளி முதல் பரிசு தொகையுடன் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த பெனால்டி கிக் லீக் போட்டி மே 18 ஞாயிற்றுக்கிழமை சுங்கை பூலோ ஐபிஜி அனைத்துலக பள்ளியில் நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

முதல் முறையாக நடைபெறும் இப்போட்டியில் அதிகமான குழுக்கள் கலந்து கொள்ள வரவேற்கப்படுகின்றன.
இந்த பெனால்டி கிக் லீக் போட்டி லீக் முறையில் நடத்தி வெற்றியாளர்களுக்கு பல்வேறு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதில்  முதல்நிலை வெற்றியாளருக்கு  2 ஆயிரம் வெள்ளியும் இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு  ஆயிரம் வெள்ளியும் மூன்றாவத, நான்காவது பரிசாக 500 மற்றும் 300 வெள்ளியும் வழங்கப்படும். அதேநேரத்தில் சிறந்த கோல் கீப்பருக்கு 100 வெள்ளியும் சிறந்த கோல் வீரருக்கு 100 வெள்ளியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவில் நான்கு விளையாட்டாளர்கள் இருக்க வேண்டும். லீக் முறை என்பதால் முதல் மற்றும் இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள குழுக்கள் மே 14ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
தொடர்புக்கு சோமு 012.9057025, சரவேஸ் 014-6226265.

Comments

  1. Thank You So Much For The Information...Really One Of The Excellent & Fast News Will Be DESAM ONLINE NEWS... Good Luck Mr Kunalan Anne From Desam Online Reporter...Best Wishes And Best Regards From B.Vigneswaran
    (VSL LARANYA FC) Manager Rawang...All The Best Anne🤝

    ReplyDelete

Post a Comment