சுங்கை சிப்புட் புத்தர் கட்டடத்தை சீரமைக்க எம்பி கேசவன் வெ.20 ஆயிரம் நன்கொடை

சுங்கை சிப்புட் புத்தர் கட்டடத்தை சீரமைக்க எம்பி கேசவன்  வெ.20 ஆயிரம் நன்கொடை

மித்ரன்

சுங்கை சிப்புட், மே 24-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் மூவின மக்களுக்கும் பாகுபாடின்றி உதவி வழங்கி வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட நாள் முதல் அனைத்து இன மக்களுக்கும் உதவி வருவதாகவும் இது தொடரும் என்றும் சுங்கை சிப்புட்டில் விசாக தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இரவு விருந்து நிகழ்வில் கேசவன் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் சுங்கை சிப்புட் புத்தர் கட்டடத்தை சீரமைக்க  எம்பி கேசவன் 20 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார். இந்த நிகழ்வில் புத்தர் ஆலய புத்த பிக்குகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Comments