இந்திய முஸ்லிம் சமூகத்தினர் "கொடுக்கும் கரங்களாக மாற வேண்டும்" 21ஆவது ஆண்டாக உதவிப் பொருட்கள், நிதி வழங்கிய ஏஸான் குழும தலைமை நிர்வாகி டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் வலியுறுத்து

இந்திய முஸ்லிம் சமூகத்தினர் "கொடுக்கும் கரங்களாக மாற வேண்டும்"
21ஆவது ஆண்டாக உதவிப் பொருட்கள், நிதி வழங்கிய ஏஸான் குழும தலைமை நிர்வாகி டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் வலியுறுத்து

காஜாங், மே 20-
இந்திய முஸ்லிம் சமூகத்தினர் "கொடுக்கும் கரங்களாக மாற வேண்டும்" என்று
21ஆவது ஆண்டாக உதவிப் பொருட்கள், நிதி வழங்கிய ஏஸான் குழும தலைமை நிர்வாகி டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் வலியுறுத்தியுள்ளார்.நமக்கு பிறர் துயரைப் போக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். இதற்காகவே பெருநாள் காலத்தில் கொடுத்து உதவி வருகிறோம். இந்த நிலையை மாற்றி கொடுக்கும் கரங்களாக நாம் மாற வேண்டும் என்று நேன்புப் பெருநாளை முன்னிட்டு
காஜாங்கில் நடைபெற்ற நோன்பு துறப்பு மற்றும் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் அவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

நீண்ட காலமாகவே இந்திய சமுதாயமும் சரி, இந்திய முஸ்லிம் சமுதாயமும் சரி வாங்கும் கரங்களாகவே இருக்கிறார்கள்.  இவர்கள் கொடுக்கும் மாற வேண்டும். நாம் கொடுத்து பழகுவோம் என்று டத்தோ ஹாஜி   அப்துல் ஹமிட் ஆலோசனை கூறினார்.ஏசான் குழுமம் 21 ஆவது வருடமாக நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கி வருவதாகவும் காஜாங் வட்டாரத்தில் 550 தனித்து வாழும் தாய்மார்கள், ஆதரவற்ற பிள்ளைகள், ஏழை மக்கள் ஆகியோருக்கு   அதோடு 40 சுராவ், 7 ஆதரவற்றகள் இல்லம், அரசு சார்பற்ற நிறுவனம் ஆகியவற்றுக்கும் உதவி வழங்கப்பட்டது. புனித ரமலான் மாதத்தையொட்டி  நாடு முழுவதும் 38 இடங்களில் அரிசி மற்றும் ரொக்க  அன்பளிப்புகளை இந்திய முஸ்லிம் மக்களுக்குத் தாங்கள் வழங்கி வருவதாக அவர் சொன்னார்.நோன்பு மாதத்தில் டத்தோ ஹமிட்டும் அவரின் துணைவியாரும் வருடந்தோறும் இந்த உன்னத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்களின் இந்த உன்னத நடவடிக்கை சிரமப்படும்    சுற்று வட்டார இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு மனநிறைவைத் தரும் என்பது நிச்சயம்.  அதே சமயம், ஹஜ் யாத்ரீகர்களின் புனித பயணத்திற்கும் இவர்கள் உதவி வருவது இந்திய முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டில் இவர்கள் கொண்டுள்ள அக்கறையையே காட்டுகிறது.காஜாங் இந்திய முஸ்லிம்  பள்ளிவாசலில் ஏசான் குழுமத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வில் 1,200 பேர் நோன்பு துறப்பில் பங்கேற்றனர்.Comments