மிஸ்டர் கிரின் லோகா சென்னை மன்னை சாதிக்குடன் இணைந்து நடித்துள்ள மியூசிக் வீடியோ மே 25 பெடரல் திரையரங்கில் வெளியிடு காண்கிறது கலைஞர்கள் ஆதரவு வழங்க வேண்டுகோள்

மிஸ்டர் கிரின் லோகா சென்னை மன்னை சாதிக்குடன் இணைந்து நடித்துள்ள மியூசிக் வீடியோ
மே 25 பெடரல் திரையரங்கில் வெளியிடு காண்கிறது
கலைஞர்கள் ஆதரவு வழங்க வேண்டுகோள்

குணாளன் மணியம்
படங்கள்: ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், மே 2-
மலேசிய பாடகர் மிஸ்டர் கிரின் சென்னை மன்னை சாதிக்குடன் இணைந்து நடித்துள்ள 'லவ் தாட்சர்' மியூசிக் வீடியோ
மே 25 பெடரல் திரையரங்கில் திரையேறுவதால்
கலைஞர்கள் ஆதரவு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த மியூசிக் வீடியோ தலைநகர், பெடரல் திரையரங்கில்  இரவு 7.00 மணிக்கு  வெளியீடு காணும். இந்த மியூசிக் வீடியோவை வருகையாளர்கள் கண்டு மகிழலாம். இது சினிமா திரைப்பட தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால் தரமாக இருக்கும் என்று மிஸ்டர் கிரின் லோகா தெரிவித்தார்.

லோகா எனும் இயற்பெயரைக் கொண்ட மிஸ்டர் கிரின் 2005இல் படித்து முடித்த பிறகு ஒரு ஆல்பம் செய்தேன். அது வெற்றியைத் தரவில்லை. ஆகையால், பிறகு செய்வோம் என்று சில ஆண்டுகள் வேலையில் கவனம் செலுத்தினேன்.

இந்நிலையில் 2015 'ஆழகாய் ஏன் பிறந்தேன்' என்ற பாடலை செய்திருந்தேன். அது கல்பனா அக்காவுக்காக செய்தேன். சமூக வலைத்தளங்களில் சிலரை வைத்து நகைச்சுவை பாணியில் பாடல் செய்தேன். இந்த பாடல் கல்பனா அக்காவுக்கு பிடித்து அவரும் பகிர்ந்தார்.


அதன்பிறகு 2016இல் 'நான்  ஹிரோ போலதாண்டி' பாடல் தயாரித்தேன். 2017இல் 'மனசு சொன்ன சொல்லு கேட்கல' பாடல் தயாரித்தேன். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பாடலை நூ சென்டரில் வெளியிட்டேன்.

இந்த பாடலுக்குப் பிறகு 2 ஆண்டுகள் இடைவெளியில் மன்னை  சாதிக்குடன் இணைந்து நான்காவது மியூசிக் வீடியோவை தயாரித்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஹன்சிகா மோத்வானியுடன் மன்னை  சாதிக் நடித்திருந்த வீடியோ மியூசிக் பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மிஸ்டர் கிரின் லோகா தெரிவித்தார்.


இந்த மியூசிக் வீடியோ மே 25ஆம் நாள் சனிக்கிழமை திரையீடு காணவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மன்னை சாதிக் வருகை தரவுள்ளார். இந்த நிகழ்வுக்கு வருகை தர விரும்புகிறவர்கள் 100 வெள்ளி மதிப்புள்ள அழைப்பு கார்டுகளை வாங்கி ஆதரவு தரும்படி மிஸ்டர் கிரின் லோகன் கேட்டுக் கொண்டார்.

இந்த மியூசிக் வீடியோ திரையிட்டில் எம்சி ராஜ், ராஜ்போய், என்.எம். லிங்கேஸ் ஆகியோர் பாடவிருக்கின்றனர். தேநீர் விருந்துடன் நடைபெறும் இந்த வெளியீட்டு விழாவில் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இதில் 300 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் 100 வெள்ளி மதிப்புள்ள அழைப்பு அட்டைகளை விரைந்து வாங்கி ஆதரவு தரும்படி  கேட்டுக் கொள்கிறோம். இதில்  வருகையாளர்கள் அனைவருக்கும் இலவச சிடி வழங்கப்படும் என்றார் மிஸ்டர் கிரின்.

உள்நாட்டு கலைஞர் கலைஞர்களுக்கு கலைஞர்கள்தான் முதலில் ஆதரவு வழங்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் ஆதரவு வழங்குவார்கள். ஆகையால், கலைஞர்கள், மக்கள், அரசியல் தலைவர்கள், அரசு சார இயக்கத் தலைவர் என்று பலரும் இந்த 100 வெள்ளி மதிப்புள்ள அழைப்பு கார்டுகளை வாங்கி ஆதரவு தரும்படி மிஸ்டர் கிரின் லோகா கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு : +60166325749

Comments