சிலாங்கூர் மாநிலம் வெ.2,500 இறப்பு நிதியை நிலைநிறுத்த வேண்டும் அரசு சாரா இயங்கள் கோரிக்கை

சிலாங்கூர் மாநிலம் வெ.2,500 இறப்பு நிதியை நிலைநிறுத்த வேண்டும்
அரசு சாரா இயங்கள் கோரிக்கை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 10-
சிலாங்கூர் மாநிலம் 2,500 வெள்ளி இறப்பு நிதியை நிலைநிறுத்த வேண்டும் அரசு சாரா இயங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

கடந்த 11 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த இந்த இறப்பு நிதியை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி ரத்து செய்துள்ளதால் சிலாங்கூர் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக செந்தூலில் அரசு சாரா இயக்கங்கள், பிகேஆர் கட்சி கிளைத் தலைவர்கள் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலைமுகிலன் தெரிவித்தார்.

இந்த இறப்பு நிதியை ரத்து செய்யும் அதிகாரம் மந்திரி புசார் அமிருடினுக்கு இருந்தாலும் தேர்தல் வாக்குறுதியை மீறிய நடவடிக்கை இதுவாகும்.  இந்த திடீர் அறிவிப்புக்கு நம்பிக்கை கூட்டணி மௌனம் சாதிப்பதும் எந்த விளக்கமும் தராததும் வருத்தமளிக்கிறது என்று அம்பாங் கெஅடிலான் கட்சியின் உறுப்பினர் பொன் ரங்கன் கூறினார்.

இந்தியர்களின் இறப்பு நிதி செலவீனம் 4 ஆயிரம் வெள்ளியை எட்டுகிறது. மூன்றாம் நாள் சடங்கு, 8ஆம் நாள் சடங்கு, 16ஆம் நாள் சடங்கு என்று 7 முதல் 8 ஆயிரம் வெள்ளி வரை செலவாகிறது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் இருப்பதும் வாக்குறுதியை காப்பாற்ற தவறியதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசு சாரா இயக்கத் தலைவர்கள் தெரிவித்ததாக கலைமுகிலன் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு 2,500 வெள்ளிக்கு பதில் தீபாவளி அன்பளிப்பு அல்லது பெருநாள் அன்பளிப்பு என்று   ஆண்டுக்கு 100 வெள்ளி வழங்குவதை ஏற்க முடியாது. மேலும் இறந்தவர்கள் நிதியை அனுபவிக்க முடியவில்லை என்று கூறுவது நாகரீகமற்ற சிந்தனையாகும். தீபாவளி பெருநாளுக்கு பெற்றோர்களுக்கு 100 வெள்ளி தராத பிள்ளைகள் இருப்பார்களா?

சிலாங்கூர் மாநிலத்தில்  ஓராண்டுக்கு சராசரியாக 10 ஆயிரம் இறப்புகளுக்கு 2 கோடியே 50 லட்சம் வெள்ளி வழங்கப்படுகிறது. இது அதிகம் என்று சொல்லி ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு 2 கோடி வெள்ளி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டுக்கும் வேறுபாடு 50 லட்சம் வெள்ளிதான். இதை சேமித்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று இயக்கத் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

சிலாங்கூர் மாநிலத்தில்  60 வயதை அடைந்த எத்தனை பேர் இபிஎப்/சொக்சோ சந்தாதாரர்களாக இருக்கிறார்கள் என்பதை மாநில அரசுஏன் ஆய்வில் எடுத்துக் கொள்ளவில்லை?
ஆகையால், மாநில அரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை கூட்டணி அரசியல் பிரதிநிதிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல இயக்கப் பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி, துன் டைம் ஜைனுடின்  ஆகியோரிடம் மே 13 திங்கட்கிழமை மகஜர் வழங்கப்படவிருப்பதாக கலைமுகிலன் குறிப்பிட்டார்.

Comments