இளைஞர்கள் உழைப்பை மூலதனமாக வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொழிலாளர் தின வாழ்த்து

இளைஞர்கள் உழைப்பை மூலதனமாக வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொழிலாளர் தின வாழ்த்து

கோலாலம்பூர், மே 1-
இளைஞர்கள் உழைப்பை மூலதனமாக வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

 ADVERTISEMENT

மலேசிய போன்ற மேம்பாட்டைந்த நாடுகளில் வேலை வாய்ப்பு இல்லை என்று இளைஞர்கள் கூற முடியாது. எத்தனையோ வாய்ப்புகள் இங்கு உள்ளன. ஆகையால், இளைஞர்கள் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.

உழைப்பு ஒன்று மட்டுமே உயர்வு தரும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். ஒரு தொழிலில் ஈடுபாடு கொண்டிருந்தால் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அந்நிய நாட்டவர்கள் இந்நாட்டில் உழைக்கும் போது இளைஞர்களால் முடியாதா என்று பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.

உழைக்கும் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம் என்று கூறிய பிரபாகரன் உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments