பொன்னமராவதி போக்குவரத்து கழகம் முன் மத்திய சங்க துணைச் செயலாளர் வி.ஆறுமுகம் தலைமையில் கொடியேற்று விழாவுடன் தொழிலாளர் தின கொண்டாட்டம்

பொன்னமராவதி போக்குவரத்து கழகம் முன் மத்திய சங்க துணைச் செயலாளர் வி.ஆறுமுகம் தலைமையில் கொடியேற்று விழாவுடன் தொழிலாளர் தின  கொண்டாட்டம்

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

புதுக்கோட்டை, மே 1-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போக்குவரத்து கழக சிஐடியு தொழில் சங்கத்தின் சார்பில் கொடியேற்றத்துடன் தொழிலாளர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உழைப்பாளர் தினம்.
தொழிலாளர்களின் அயராது உழைப்பினை முன்னெடுத்து ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

 ADVERTISEMENT

இவ்வருடமும் இவ்விழா பொன்னமராவதி போக்குவரத்து கழக சிஐடியு தொழில் சங்கம் சார்பில் கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கியும் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. இதில் சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் வி.ஆறுமுகம் இனிப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார்.

 இதில் சிஐடியு தலைவர் எஸ்.பாலமுருகன்,  துணைத் தலைவர் கே.பெருமாள், செயலாளர் கே.கண்ணன், துணைச் செயலாளர் சி.ரவிசந்திரன், பொருளாளர் எ.மணிவேல்,
பொன்னமராவதி சாலையோர வியாபாரிகள் சங்க( சிஐடியு) மாவட்ட செயலாளர் ஏ.தீன் மற்றும்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் துணைச் செயலாளர் சி.ரவிசந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Comments