செந்தோசா மக்களுக்கு விடிய விடிய குடிநீர் விநியோகம்! களத்தில் இறங்கினார் சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ்

செந்தோசா மக்களுக்கு விடிய விடிய குடிநீர் விநியோகம்!
களத்தில் இறங்கினார் சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ்

குணாளன் மணியம்

கிள்ளான், மே 10-
கிள்ளான் மக்கள் ஏழாவது நாளாக தண்ணீ்ர் இன்றி தவித்து வரும் நிலையில் செந்தோசா வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 நாட்களாக மக்களுக்கு விடிய விடிய குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த குடிநீர் விநியோகத்திற்கு உதவ செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் களத்தில் இறங்கினார்.

மக்களுக்கு விடிய விடிய  குடிநீர் விநியோகம் வழங்கப்பட்ட போது குணராஜ் உதவினார். செந்தோசா சட்டமன்ற அலுவலக பணியாளர்கள், குணராஜ் ஆதரவாளர்கள், தொண்டூழியர்கள் உள்ளிட்ட பலர் குடிநீர் விநியோகம் செய்ய உதவினர்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தூக்கமின்றி மக்களுக்காக குடிநீர் விநியோகம் செய்ய களத்தில் இறங்கினார். ஷபாஸ் நிறுவனத்தின் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. குணராஜ் அந்த இடத்தில் இருந்து மக்களுக்கு குடிநீர் வழங்க உதவினார.

தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பில் தேசம் வலைத்தளம் குணராஜிடம்  கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது தங்களால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டதாகவும் தண்ணீர் விநியோகம் கட்டம் கட்டமாக சீரடையும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

பந்திங்- தைப்பிங் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் நீர் குழாய் உடைந்து  கிள்ளான் வட்டாரம் முழுவதும் வரலாறு காணாத அளவில்
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments