தமிழர் பாரம்பரிய கொண்டாட்டங்கள் இன ஒற்றுமையை வலுப்படுத்தும் சுங்கை துவா சட்டமன்ற இந்திய சமூகநல தலைவர் மணிவண்ணன் நம்பிக்கை

தமிழர் பாரம்பரிய கொண்டாட்டங்கள் இன  ஒற்றுமையை வலுப்படுத்தும்
சுங்கை துவா சட்டமன்ற இந்திய சமூகநல தலைவர் மணிவண்ணன் நம்பிக்கை

குணாளன் மணியம்

பத்துகேவ்ஸ், மே 7-
தமிழர் பாரம்பரிய கொண்டாட்டங்கள் இன ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று கோம்பாக் நாடாளுமன்றம், சுங்கை துவா சட்டமன்ற இந்திய சமூகநல தலைவர் மணிவண்ணன் கூறினார்.இந்த தமிழர் பாரம்பரிய விழாக்களில் சம்பந்தப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த மலாய், சீன, சீக்கிய மக்கள் கலந்து கொள்வதன் வழி இந்திய மக்களுடனான ஒற்றுமை மேலோங்கும் என்று பத்துமலையில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில்  மணிவண்ணன் அவ்வாறு சொன்னார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்நாட்டில் இன  ஒற்றுமை மிகவும் அவசியம். இத்தகைய தமிழர் பாரம்பரிய  கொண்டாட்டங்கள் வழி ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்று மணிவண்ணன் தெரிவித்தார்.கோம்பாங் நாடாளுமன்றம், சுங்கை துவா சட்டமன்றம்,  செலாயாங் நகராண்மைக்கழகம், கேகேஐ சிலாங்கூர், பிஇபிடி  ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் கண்ணை கட்டி உறியடித்தார். இதில் மேலும் கபடி, வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், கோலம் வரையும் போட்டி, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றன.இந்த சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார், மாவட்ட அதிகாரி, காவல் துறையினர், கெஅடிலான் கட்சியின் கோம்பாக் கிளையின் உதவித் தலைவர் நந்தகோபாலன், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.Comments