"தேசம் மண்ணின் மைந்தர்கள்" ஊடகங்களின் கூர்மையான எழுத்து தரமான படங்களை உருவாக்க தூண்டுதலாக இருக்க வேண்டும் "ஒரு கதை சொல்லட்டா சார்" திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் சி.குமரேசன் ஆலோசனை

"தேசம்  மண்ணின் மைந்தர்கள்"
ஊடகங்களின் கூர்மையான எழுத்து  தரமான  படங்களை  உருவாக்க தூண்டுதலாக இருக்க வேண்டும்
"ஒரு கதை சொல்லட்டா சார்" திரைப்பட செய்தியாளர் சந்திப்பில்
இயக்குநர் சி.குமரேசன் ஆலோசனை 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 12-
ஊடகங்களின் கூர்மையான எழுத்து தரமான  படங்களை  உருவாக்க தூண்டுதலாக இருக்க வேண்டும் என்று நாட்டின் பிரபல
இயக்குநர் சி.குமரேசன் ஆலோசனை கூறியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மலேசியப் படம் என்பதற்காக தரமில்லாத படங்களுக்கும் 100 புள்ளிகள் வழங்கும் வகையில் ஊடகங்களின் செய்திகளும் கட்டுரைகளும் இருந்தால் மலேசிய படத்தை தரத்தை எதிர்பார்க்க முடியாது என்று காஷ் வில்லன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இவ்வாண்டு திரையேற காத்திருக்கும் "ஒரு கதை சொல்லட்டா சார்" (ஒகேஎஸ்எஸ்)  திரைப்பட முன்னோட்ட காணொளி அறிமுக விழா செய்தியாளர் சந்திப்பில் கெராக் காஸ் மலாய் தொடர் நாடகம் வழி மலாய், தமிழ், சீன ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ள சி.குமரேசன்   தெரிவித்தார்.

மலேசிய படம் என்பதற்காக ஆதரவு வழங்க வேண்டும் என்பதல்ல தரமான படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஊடகங்கள் உண்மையை எழுத வேண்டும். தரமில்லாத படத்திற்கு எப்படி எழுதினாலும் ஓடாது. இத்தகைய தரமில்லாத படங்களுக்கு 30 புள்ளி என்றால் அதைத்தான் தர வேண்டும்.  100 புள்ளிகள் வழங்கினால்  அவர்களின் அடுத்த படைப்பு தரமில்லாத ஒன்றாக அமைந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் குமரேசன்.

சென்னையில் ஆனந்த விகடன் எனும் ஊடகம் ஒவ்வொரு சினிமா படத்திற்கும் புள்ளிகள் வழங்குவார்கள். ஒட்டு மொத்த சினிமா உலகமே அதற்காக காத்திருக்கும். தமிழ்ப்படம் என்றால் தரத்திற்குகே  முக்கியத்துவம் வழங்குவார்கள். யார் நடித்தால் என்ன? தரமே முக்கியம் என்கிறது ஆனந்த விகடன். இந்த நடைமுறையை மலேசிய ஊடகங்களும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் "ஒரு கதை சொல்லட்டா சார்" போன்ற தரமான படங்கள் வெளிவரும் என்று சி.குமரேசன் ஆணித்தரமாக கூறினார்.

Comments