கல்வி கண் திறக்கும் ஆசிரியர்களை என்றென்றும் போற்றுவோம் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஆசிரியர் தின வாழ்த்து

கல்வி கண் திறக்கும் ஆசிரியர்களை என்றென்றும் போற்றுவோம்
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஆசிரியர் தின வாழ்த்து

கோலாலம்பூர், மே 16-
கல்வி கண் திறக்கும் ஆசிரியர்கள் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்கள் என்று ம.இ.கா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

மொழியைக் கற்று தந்து, கல்விக்கு அடித்தளம் அமைத்து அறிவை புகட்டி, வாழ்க்கைக்கு வழிகாட்டி வரும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கு நாம் என்றும் நன்றிகடன்பட்டவர்கள். மாதா, பிதாவுக்கு அடுத்து ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு தெய்வமாக இருக்கிறார்கள். மாணவர்களுக்கு ஏணியாக இருக்கும் ஆசிரியர்கள் என்றும்  போற்றப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஒரு மாணவரின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் ஆசிரியர்கள் அவர்களை கல்விமான்களாக உருவாக்க முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.மாணவர்கள் நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் மெழுகுவர்த்தியாய் உருகும் ஆசிரியர்களின் தியாகத்தை அனைவரும் போற்ற வேண்டும்.

தன்னிகரற்ற உழைப்பினை வழங்கும் ஆசிரியர்களின் தியாகத்தை போற்றுவோம் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தமது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் வலியுறுத்தினார்.

Comments