பாலியல் தொல்லை விவகாரம்! நாடாளுமன்ற உறுப்பினருக்கு துணை போனாரா? ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் மீது காவல் துறையில் புகார் ம.இ.கா விசாரணை நடத்துமா?

பாலியல் தொல்லை விவகாரம்! நாடாளுமன்ற உறுப்பினருக்கு துணை போனாரா?
ம.இ.கா மத்திய  செயலவை உறுப்பினர் மீது காவல் துறையில் புகார்
ம.இ.கா விசாரணை நடத்துமா?

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 17-
பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினருக்கு துணை போனதாக நம்பப்படும்
ம.இ.கா மத்திய  செயலவை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக  காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண் மேலும் ஒரு புகாரை செய்துள்ளதாக தெரிகிறது. அந்த நாடாளுமன்ற உறுப்பினருடன் கூட்டு சேர்ந்து பாலியல் தொல்லைக்கு துணை போனதாக அப்பெண் தமது காவல் துறை புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கடந்த 6 மாதங்களாக சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக நம்பப்படும்  வேலையில் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரின் பெயரும் அடிபட்டுள்ளது ம.இ.கா உறுப்பினர்கள் மத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இதுகுறித்து ம.இ.கா விசாரணை நடத்துமா?

Comments