ஒரு கலைஞனுக்கு அனுபவம் மிகவும் அவசியம்! இளைஞர்கள் திரைப்படக்குழுவாக இருந்தாலும் அனுபவமே பேசும்! -இயக்குநர் சி.குமரேசன்

ஒரு கலைஞனுக்கு அனுபவம் மிகவும் அவசியம்!
இளைஞர்கள் திரைப்படக்குழுவாக இருந்தாலும் அனுபவமே பேசும்!
-இயக்குநர் சி.குமரேசன் 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 8-
ஒரு கலைஞனுக்கு அனுபவம் மிகவும் அவசியம். இளைஞர்கள் அடங்கிய திரைப்படக்குழுவாக இருந்தாலும் அனுபவமே பேசும் என்று பிரபல மலேசிய நடிகர், இயக்குநர் சி.குமரேசன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இளம் திரைப்படக்குழு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைப்படத் தயாரிப்பில் அனுபவமே  வெற்றிக்கு வித்திடும். அந்த வகையில் ஷாலினி பாலசுந்தரம் இளமையில் கலைத்துறையில் ஒரு அறிவிப்பாளராக தலைகாட்டினாலும் பலர் திரைப்படம் தயாரிப்பதை பார்த்து அனுபவத்தில் மூன்று படங்களை தயாரித்துள்ளதாக "புலனாய்வு" திரைப்படத்தின் பெயர் அறிமுக விழாவில் குமரேசன் அவ்வாறு தெரிவித்தார்.

ஷாலினி பாலசுந்தரம்- சதிஷ் நடராஜன் இணையினரின் படங்கள் என்றால் அதில் ஒரு தரம் இருக்கும். அந்த வகையில் ஷாலினியை பாராட்டாமல் இருக்க முடியாது. புலனாய் திரைப்படத்தில் நடித்துள்ள ஷைலா நாயர் அனுபவமிக்க ஒரு கலைஞர். பாடகராக இருந்து நடிப்புத் துறையில் ஈடுபட்டு வருகிறார். ஷைலான நாயர் ஒரு பண்பட்ட கலைஞர் என்று குமரேசன் சொன்னார்.

"புலனாய்வு" திரைப்பட நாயகன் கபில் மிகவும் திறமையானவர். எப்போதும் துடிப்போடு காணப்படும் முன்னேறத் துடிக்கும் ஒரு கலைஞர். இதில் நடித்துள்ள சசிஅபாஸ் குறுகிய இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார். நான் அறிமுகமான திரைப்படம் ஆத்மா. இப்படத்தில் அவர் நாயகனாக நடித்தார். இதில் மேலும் பல புதிய முகங்கள் நடித்துள்ளனர். உங்கள் நடிப்பை திரையில் காண ஆவலாக இருக்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துகள்.

மலேசிய படம் என்பதற்காக  ஆதரவு வழங்காமல் தரமான திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். மலேசியாவில் பல திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மக்கள் எப்போதும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மலேசிய படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை காட்டிலும்  தரமான மலேசிய திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று குமரேசன் கேட்டுக் கொண்டார்.

Comments