சேலம் ஆர்ஜே குட்டி பிரகாஷ், இர்பான் நடிப்பில் சுழல் குறும்படம் படப்பிடிப்பு தொடங்கியது

சேலம் ஆர்ஜே குட்டி பிரகாஷ், இர்பான் நடிப்பில் சுழல் குறும்படம்
படப்பிடிப்பு தொடங்கியது

சேலம் தேசம் நிருபர் மதன்

சேலம்,மே 18-
தன் கம்பீரக் குரலால் உலகத் தமிழர்களை தன்வசப்படுத்திய சேலம் ஆர்ஜே குட்டி பிரகாஷ், அவரது நண்பர் இர்ஃபான்  நடிக்கும் சுழல் குறும்படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் தொடங்கியது.

"ஹலே வணக்கம், வந்தனம், நமஸ்தே" என்று குரலை கேட்டவுடன் இவர் ஆர்ஜே குட்டி பிரகாஷ் என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு மட்டுமன்றி உலகத் தமிழர்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஆர்ஜே குட்டி பிரகாஷ் தனது தங்க்க் குரலில் தங்க மகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமான கதைகளை படிப்பினையாக மக்களுக்கு சொல்லி வரும் குட்டி பிரகாஷ் பலருக்கு குறிப்பாக  இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு வந்துள்ளார். பேசுவதில் மட்டும் வல்லமை படைத்தவர் என்று நாம் நினைத்து வந்தோம். ஆனால், நடிக்கவும் தெரியும் என்பதை சுழல் குறும்படத்தின் வழி நிரூபித்துள்ளார் ஆர்ஜே குட்டி பிரகாஷ்.

ஆர்ஜே குட்டி பிரகாஷ்.
நடித்து வரும் "சுழல்" குறும்படத்தின் முதல் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த சுழல் குறும்படம் ஓர் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு மதன் என்பவர் இயக்குகிறார். இந்த குறும்படத்தின் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வரி ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.

 *தமிழன் என்று சொல்லுடா தலை குனிந்து நில்லடா* என்ற வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மற்றும் மத்தியில் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த குறும்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த பிரபல நடிகையும் தமிழகத்தின் மக்கள் மத்தியில் இருக்கும் பிரபல நடிகரும் நடிக்கின்றனர்.

இந்த குறும்படம் முடிந்த பிறகு இது மிகப்பெரிய திரைபடமாக எடுக்கப்படலாம் என்று  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சேலம் RJ குட்டி பிரகாஷ்  மற்றும் இர்பான் இந்த படத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமை என படத்தின் இயக்குநர் மதன் சொல்லியிருக்கிரார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சேலம்,  சென்னை, கோவை பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில்  வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது...மேலும் தகவல்களுக்கு salem RJ Kutty Prakash முகநூல் பக்கத்தை வலம் வாருங்கள்.

Comments

Post a Comment