முஸ்லிம் சமூகத்தோடு இணைந்து நோன்பு துறப்போம்! இன ஒற்றுமையை வலுப்படுத்துவோம் -எம்பி கேசவன்

முஸ்லிம் சமூகத்தோடு இணைந்து நோன்பு துறப்போம்!
இன ஒற்றுமையை வலுப்படுத்துவோம்
-எம்பி கேசவன்

மித்ரன்

சுங்கை சிப்புட், மே 24-
முஸ்லிம் சமூகத்தோடு இணைந்து நோன்பு துறந்து இன ஒற்றுமையை வலுப்படுத்துவோம் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மலாய், இந்திய, சீன இனங்கள் ஒற்றுமையுடன் வாழும் காட்சியை மலேசியாவில் மட்டுமே காண முடியும். நோன்புப் பெருநாள், சீனப்புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பல பெருநாட்களை ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் கொண்டாடுவோம் என்று சுங்கை சிப்புட்டில் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது கேசவன் அவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லீம்கள் நோன்பு இருக்கும் இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பு துறப்பில் முஸ்லீம் மக்களோடு மற்ற இனத்தவர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேசவன் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் கேசவன் முஸ்லீம் மக்களுக்கு பேரிச்சம்பழம் அடங்கிய பொட்டலத்தை பகிர்ந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments