கொடுமைக்கே கொடுமையான கொடுங் கோலரது அரக்கச் செயல் சாகாதா..? மு.வீ.மதியழகன் துயரம்

கொடுமைக்கே கொடுமையான 
கொடுங் கோலரது அரக்கச் செயல் சாகாதா..?
மு.வீ.மதியழகன்
துயரம்

பினாங்கு, மே.25-
அப்பா....
அப்பா...
எங்கே அப்பா நீ
உன்னை நான்
மனதுக்குள் அழைப்பது கேட்கிறதா?

அப்பா......
என்னால் வலிதாங்க முடியல
கதறியழ
துடிக்கின்றேன்
பிரபாகரன்
பிள்ளையாச்சே
அழலாமா?

தாங்கொன்னா வலியை
தாங்கிக் கொண்டு
என்னை நானே
சாந்தப்படுத்தி கொண்டேன்

ADVERTISEMENT


 ADVERTISEMENT

அப்பா........
அப்பா........
ஆண்டவனுக்கு மேலாக
உன்னை
மட்டுமே நம்பி காத்திருக்கின்றேன்,

கண்ணே
மணியே
முத்தே
என வாரி அணைத்து
முத்தமிட்டு
களிப்பெய்தி
மகிழ்வாயே
அந்த மகனை வதைக்கிறார்களே,

அப்பா.........
தமிழராய் பிறந்தது குற்றமா?
இல்லை
உனக்கு மகனாக பிறந்தது
குற்றமா?

எங்கு போனாய்?
என்ன ஆனாய்?
ஏன் எனை தேடி வரல
கயவர்களை அடித்து வீழ்த்தி
என்னை அழைத்துப்போக
இன்னும்
வரவேயில்லையே நீ,

பயம் என்பது கிஞ்சிற்றும் இல்லாதவராயிற்றே என் அப்பா
இன்னும்
ஏன் எனை
மீட்டெடுக்க வரவில்லை?

ஏங்கித் தவிக்கிறேன்
உன் மடியில்
சாய்ந்து விழ
தேம்பி அழ,

நாவிலே தேன் தடவி
இனிக்க இனிக்கப் பேசி
இனிப்புக்கள் எல்லாம் தந்து
உன் அப்பா எங்கே......
உன் அப்பா எங்கே......
என
துருவி
துருவி கேட்டனரே,

முதலில் புரியல அப்பா
பிறகு தெரிஞ்சது
தமிழ் பேசுவோரும் உடன் இருந்து சிங்களவருக்கும் ஒத்தாசை
செய்தபோது,

அப்பா எனக்குள்
இரண்டு அதிவேக நம்பிக்கை இருந்தது
ஒன்று நீ
மற்றொன்று என்னோடு உறவாடிய தமிழர்கள்,

தெரியாது
எனக்கு தெரியாது என்று
உண்மையைத்தானே சொன்னேன்,

பழிப்புணர்ச்சியோடு
என்னைப்பலாரென அரைந்தனர்
கோரமாக தாக்கினர்,

ரணங்கள்
மனம் முழுவதும் வஞ்சத்தோடு
பகை முடிக்க
எனை நடத்திய விதம்
தாங்கொன்னா
வலி நிரம்பியது அப்பா,

இந்த வன்மம்
கொடுஞ் செயல்
இனி வேறு எந்த தமிழர்க்கும் வந்திடக்கூடாது
அப்பா.......
வரவிடக்கூடாது,

பலவற்றை சொல்லிட நினைகிறேன்
சொன்னால்
தாங்கிட மாட்டிங்கன்னு
சொல்லாது துடிக்கிறேன்
நெருப்பில்
குளிப்பதுபோல,

உன் செல்ல மகனான எனை
சிங்கள ராணுவத்தார்
கொல்லப்போகிறார்கள்
போலும்,

உணரமுடிகிறது
உன் மகனாயிற்றே
என்னை அழைத்து போக
வருவாயா?
பிணமாக எடுத்துபோக
வரவாயா?

அப்பா
என்னை தனியறையில் பூட்டி
அதிநவீன துப்பாக்கியை காட்டி
மிரட்டினர்
பயப்படல
அது வியப்பில்லை எனக்கு
துப்பாக்கி மீது படுத்துறங்கியது வழக்கம்தானே,

ஆனால்,
என் மார்பகத்தின் பக்கமிருக்கும் இருதயத்தில் சுடுவார்கள் என
எண்ணிடவே இல்லை அப்பா,

என் உயிர்
என்னை விட்டுப் பிரியும் போது
நினைவெல்லாம்
உன்னை எண்ணி துடித்தது,

என் இருவிழிகள் மூடியது
ஆம்,
அப்பா
சிங்கள சிப்பாய்கள் புடை சூழ்ந்து
உன் மகனை
சுட்டு கொன்றுவிட்டனர்,

நேர்மைக்கு அழிவில்லை
பகை முடிக்க பச்சிளம் பாலகனை
பலிகொடுத்துள்ளீர்
விட்டு விடாதே
அப்பா........
அவர்களை விட்டுவிடாதே
மீட்டெடு தமிழ் ஈழத்தை
என் ஆத்மா உணர
அதுவரையில் சாந்தியில்லை,

கொன்றவன்
யாரென பார்
என் விழி திரையில்
அவனை படமெடுத்து
வைத்துள்ளேன்.

உன் அன்பு மகனின்
இதய புதையல் இது.

Comments