திறமை இருந்தால் வாய்ப்பு கண்டிப்பாக இருக்கும்! "புலனாய்வு" படப்பிடிப்பில் கதாபாத்திரங்களாகவே மாறி நடித்தோம் -கதாநாயகன் கபில் கணேசன்

திறமை இருந்தால் வாய்ப்பு கண்டிப்பாக இருக்கும்!
"புலனாய்வு" படப்பிடிப்பில் கதாபாத்திரங்களாகவே மாறி நடித்தோம்
-கதாநாயகன் கபில் கணேசன்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 7-
திறமை இருந்தால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். நடிப்பு வாய்ப்பு தேடிபவர்கள்  திறமைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று ஷாலினி பாலசுந்தரம்-ஷைலா நாயர் இணையினரின் கூட்டு தயாரிப்பில் மலர்ந்துள்ள "புலனாய்" திரைப்படத்தின் கதாநாயகன் கபில் கணேசன் கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

அந்த வகையில் புலனாய்வு" திரைப்படத்தில் நடக்கும் போது நான் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தேன். நான் மட்டுமன்றில்  படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கதாபாத்திரங்களாகவே மாறி நடித்ததாக
நாயகன் கபில் தெரிவித்தார்.

என் திறமை மீது நம்பிக்கை கொண்டு "திருடாதே பாப்பா திருடாதே" திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார் ஷாலினி. அதில் நடிக்கும் போது மிகவும் சிரமமாக  இருந்தது. தலை முடிக்கு வர்ணம் அடித்து மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால், அடுத்த படமான "இரயில்  பயணங்கள்" அப்படியொரு சிரமத்தை கொடுக்கவில்லை என்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற "புலனாய்வு" திரைப்பட பெயர் அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் கபில் அவ்வாறு தெரிவித்தார்.

"புலனாய்வு" திரைப்படம் எனக்கு நல்ல பெயரை தேடித்தரும் என்று நம்புகிறேன். இதுவொரு குற்றச்செயல் சம்பந்தப்பட்ட கதை. நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பது ரகசியம். ஆனால், மாறுபட்ட கபிலை இதில் பார்க்கலாம் என்று கபில் சொன்னார்.

"புலனாய்வு" படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் கதாபாத்திரங்களாகவே மாறியிருந்தோம். எந்நேரமும் புலனாய்வு கதாபாத்திரம் குறித்துதான் பேசுவோம். ஷாலினி பாலசுந்தரம் குறுகிய காலத்தில் மூன்று வெற்றிப்படங்களை தந்துள்ளார். இதில் அவரது வளர்ச்சியை நான் கண்டேன். "திருடாதே பாப்பா திருடாதே", "இரயில் பயணங்கள்" ஆகிய இரண்டு திரைப்படங்களில் ஷாலினியோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன் என்றார் கபில்.

"புலனாய்வு" ஒரு மாறுபட்ட படைப்பு. மலேசிய ரசிகர்களை இப்படம் கண்டிப்பாக கவரும். திரையரங்கில் திரையேறிய ஷாலினி பாலசுந்தரத்தின் "திருடாதே பாப்பா திருடாதே" கீதையின் ராதை ஆகிய இரண்டு படங்களுக்கு வழங்கிய ஆதரவை இப்படத்திற்கும் வழங்கும்படி கதாநாயகன் கபில் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பிரபல பாடகி டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர்-ஷாலினி பாலசுந்தரம் இணை சேர்ந்துள்ள "புலனாய்" திரைப்படத்தில் கே.எஸ்.மணியம், ஷாலினி பாலசுந்தரம், ஷைலா நாயர்,  சசிதரன், கபில், இர்ஃப்ன், ஷாபி, சரண்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments