ஆலயங்கள் வழிபாட்டு தலங்களாகவும் சமூக சேவை மையங்களாகவும் மாற வேண்டும் !

ஆலயங்கள் வழிபாட்டு தலங்களாகவும் சமூக சேவை மையங்களாகவும் மாற வேண்டும் !

பெட்டாலிங் ஜெயா, மே 26-
ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாகவும் சமூக சேவை மையங்களாகவும்  மாறாக வேண்டும் என்று மலேசிய இந்து ஆலய ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஆலயங்கள் லாபம் ஈட்டும் வர்த்தக மையங்களாக இருக்கக் கூடாது. வழிபாட்டுத் தலங்கள்,  சமூக  சேவை மையங்களாக செயல்பட்டால் சமுதாயத்தை பேணிகாக்க முடியும் என்று  அருண் துரைசாமி அறைகூவல் விடுத்தார்.

ஆகம அணி அமைப்பு  “ஆலயம் மற்றும் சமுதாய சேவை” எனும் மாநாட்டை நேற்று மே 26இல்  நடத்தியது. பெட்டாலிங் ஜெயா, சிவிக் செண்டர் அரங்கில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், முத்துக்குமார குருக்கள் ஆகியோர் வருகை புரிந்தனர்.

மேலும் இந்து சமய அரசு சாரா இயக்கங்களின் பிரதி நிதிகள், இந்து சமய ஆர்வளர்கள், ஆலய நிர்வாக பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் ஆலயத்தில் நடைபெறும் முறைகேடுகள் & அவற்றை தடுக்க முன்னெடுக்க கூடிய வழிமுறைகள் விளக்கப்பட்டது. அதனை அருண் துரைசாமி வழி நடத்தினார்.

அவர் தமதுரையில், இன்றைய காலக்கட்டத்தில் வழிபாடு தலங்களாகவும் சமூக சேவை மையங்களாகவும் இருக்க வேண்டிய நாட்டில் உள்ள ஆலயங்கள் சில, அவற்றின் நிர்வாகத்தினால் பணம் சம்பாதிக்கும் தளங்களாக பயன்படுத்தபட்டு வருகின்றன.

ஆலயம் என்பது பொது சொத்து. எனவே இது போன்ற பாதக செயல்களை தடுத்து நிறுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றினைய வேண்டும். ஆலய நிர்வாகமும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பம்சமாக பெட்டாலிங் ஜெயாவில் செயல்ப்பட்டு வரும் இந்து சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக விழாவும் நடைபெற்றது.

தொடர்ந்து சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆலயங்கள் தங்களின் சமுதாய சேவை திட்டத்தை தொடங்குவதற்கு தேவைப்படும் மானியங்கள் சார்ந்த தகவல்களும் அதனை பெறுவதற்கான வழிமுறைகளும் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டது.

மேலும் இந்து சமய வாழ்வியல் சார்ந்த கல்வி திட்டங்கள் பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க வழி வகுக்கும் “தர்மா”  என்ற நன்கொடை திட்டமும் இந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆலயங்கள் தங்களின் சமுதாய சேவை திட்டத்தை தொடங்குவதற்கு தேவைப்படும் மானியங்கள் சார்ந்த தகவல்களும் அதனை பெறுவதற்கான வழிமுறைகளும் குறித்த விளக்கங்களும் மாநாட்டின் பொழுது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments