கதாபாத்திரங்கள் அடிப்படையில் கதைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் "புலனாய்வு" திரைப்பட கலைஞர்கள் இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம்

கதாபாத்திரங்கள் அடிப்படையில் கதைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் "புலனாய்வு" திரைப்பட கலைஞர்கள்
இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம்

குணாளன் மணியம்
படங்கள் : ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், மே 6-
கதாபாத்திரங்கள் அடிப்படையில் கதைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் "புலனாய்வு" திரைப்பட கலைஞர்கள் என்று  அதன் இயக்குநர்களில் ஒருவரான ஷாலினி பாலசுந்தரம் கூறியுள்ளார்.

"புலனாய்வு" திரைப்படத்தில் அனுபவமுள்ள கலைஞர்களுடன் புதிய கலைஞர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கதைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள். புதிய முகங்கள் பலர் இப்படத்தில் நடித்திருந்தாலும் அவர்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருந்ததாக "புலனாய்" திரைப்பட பெயர் அறிமுக விழாவில் தேசம் வலைத்தளம் எழுப்பிய கேள்விக்கு ஷாலினி பாலசுந்தரம் அவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

கீதையின் ராதை, திருடாதே பாப்பா திருடாதே, இரயில் பயணங்களில் திரைப்பட வெற்றிக்குப் பிறகு "புலனாய்" களத்தில் ஷைலா நாயருடன் இறங்கியிருக்கிறோம். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மக்கள் முழு முதல் காரணம். படம் தரமாக இருந்தால் நாம் ஏன் தயங்க வேண்டும்? மலேசியர்கள் எப்போதும் தரமான படங்களுக்கு கண்டிப்பாக ஆதரவு வழங்குவார்கள் என்று ஷாலினி பாலசுந்தரம் சொன்னார்.

"புலனாய்வு" மக்கள் ஆதரவில் கண்டிப்பாக வெற்றியை குவிக்கும். நாங்கள் தரத்திற்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறோம்.
 "புலனாய்வு" திரைப்படம் இன்னும் பல வேலைகளை கடக்க வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் படம் வெளிவரும். இதில் நடித்தவர்கள் அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். எனது கணவர் நடராஜன் இணையில் "புலனாய்வு" வை  இயக்கி இருக்கிறேன் என்றார் ஷாலினி பாலசுந்தரம்.

நாட்டின் பிரபல பாடகி டத்தின்ஸ்ரீ ஷைலான நாயருடன் இணை சேர்ந்துள்ளார் ஷாலினி பாலசுந்தரம். இந்த "புலனாய்" திரைப்படத்தில் கே.எஸ்.மணியம், ஷாலினி பாலசுந்தரம், ஷைலா நாயர், சி.குமரேசன், சசிதரன், கபிலன், இர்ஃப்ன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments