சினிமாவில் நடித்து ஏழை மாணவர்களுக்கு உதவ நினைக்கும் தமிழ்நாடு, கரூர் நாகராஜன் எண்ணத்திற்கு சினிமாகாரர்கள் உயிர் தருவார்களா?

சினிமாவில் நடித்து ஏழை மாணவர்களுக்கு உதவ நினைக்கும் தமிழ்நாடு, கரூர் நாகராஜன் எண்ணத்திற்கு சினிமாகாரர்கள் உயிர்  தருவார்களா?

சென்னை,மே 6-
சினிமாவில் நடித்து, அதில் இருந்து வரும் வருமானத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் எண்ணத்திற்கு சினிமாக்காரர்கள் உயிர்  தரவேண்டும்  என்று கரூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாழ்க்கையில் பலரும் பலவிதமான லட்சியங்களை கொண்டிருப்பார்கள். எப்படியாவது சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் பலரது லட்சியமாக இருக்கும். ஆனால், கரூர்மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த வளர்ந்து வரும்  நடிகர் நாகராஜன் லட்சியம் மாறுபட்டுள்ளது.

நாகராஜன் வசிக்கும் இடத்தில் பல ஏழை மாணவர்களை கண்ட இவர் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டார். கூலி வேலை செய்து அவர்களுக்கு உதவியிருக்கிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் மேலோங்கி இருந்தது. இந்நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ்,
தலக்கோணம் கலைவாணி, காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட எட்டு படங்களில் சிறிய வேடங்களில்  நடித்துள்ளார்.

நாகராஜன் 2019 பள்ளி திறக்கும் போது முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணப்  பொருட்கள் வழங்கியுள்ளார்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக  100 நாள்  வேலையில் பணி செய்து வரும் நாகராஜன் அதில் சேமித்த ரூபாயை பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.

நாகரான் பின்னனி என்ன? பிறந்து வளர்ந்த சமயத்தில் ஐந்து வயது வரை நடக்க முடியாமல்  இருந்த நாகராஜன் ஐந்து வயதுக்கு பிறகே நடக்க ஆரம்பித்தார். அதன்பிறகு  பள்ளிக்குச் சென்று ஏழாம் வகுப்பு வரை படித்து உள்ள இவருக்கு தற்போது  வயது 34 வயதாகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஏழை மாணவர்களுக்கான இவரது சேவை தொடங்கியது. இவர் தமது பகுதியில் உள்ள  பள்ளிகளில் படித்து வரும் ஏழை மாணவ மாணவிகளுக்கு குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று  இலவசமாக தேசியக்கொடி, பாட புத்தகங்கள், எழுத்து உபகரணங்கள் என்று பல உதவிகளை செய்துள்ளார்.


பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கான இவரது உதவி இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்
லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நோட்டு, பேனா விற்பனை கடையை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு  தொடங்கினார்.  தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச  மை வழங்குகிறார் நாகராஜன்.

இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்த நாகராஜன் ஒரு நிர்வாகி வீட்டில் 10 ஆண்டுகளாக பாதுகாவலர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு தலக்கோணம், கலைவாணி, காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட 8 படங்களில் நடித்திருக்கிறார். இதன்வழி வந்த பணத்தை ஏழை  மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

திரைப்படத்தில் நடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வரும்  நாகராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
திரைப்படம் தயாரிக்கும் கம்பெனிக்கு  சென்றால் அங்கே இயக்குநர் மற்றும தயாரிப்பாளர்கள் இருந்தாலும் சந்திக்க விடமாட்டார்கள். சினிமாவில் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ வாய்ப்பு கேட்கவில்லை. மாறாக அதில் வருகின்ற  வருமானத்தை ஏழைப்  மாணவர்களுக்கு உதவி வழங்கவே வாய்ப்பு கோருகிறேன். ஆகையால், தயவு செய்து  யாராவது வாய்ப்பு தாருங்கள் என்றார் நாகராஜன்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நாகராஜனுக்கு  அப்பா கிடையாது. சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். வீட்டுக்கும் சாப்பாட்டுக்கும் காசு தருவதில்லை. ஆனால், ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார்.  பொது மக்களின் அடிப்படை வசதிக்காக   சம்பந்தப்பட்ட அலுவலர்களை அணுகி பல கோரிக்கைகள் நிறைவேற்றி இருக்கிறார்.


புதுமுகம் நடிகர்களுக்கு வாய்ப்பு தரும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஏழை பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை கொண்டுள்ள நாகராஜனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது கரூர் மக்களின் வேண்டுகோள். ஆகையால், சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இவரது லட்சியத்திற்கு கரம் கோர்க்க வேண்டும் என்பது கரூர் மக்களின் அன்பான வேண்டுகோள். செய்வார்களா? லட்சியத்தை நிறைவேற்றுவார்களா? காத்திருக்கிறார் கரூர் நாகராஜன். தொடர்புக்கு 9894779404

Comments