"தேசம் மண்ணின் மைந்தர்கள்" புதிய கலைஞர்கள் நடிப்பில் குணசேகரன் கணேசன் நடித்துள்ள பெயரிடப்படாத குறும்படம் தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

"தேசம் மண்ணின் மைந்தர்கள்" 
புதிய கலைஞர்கள் நடிப்பில் குணசேகரன் கணேசன் நடித்துள்ள பெயரிடப்படாத குறும்படம்
தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 3-
மலேசியத் திரை உலகில் 'ஷார்பிலிம்' எனப்படும் குறும்படங்கள் முத்திரை பதித்து வருகின்றன. அந்த வகையில் முழுக்க முழுக்க புதியவர்கள் தயாரிப்பில் பெயரிடப்படாத குறும்படம் ஒன்றில் கலைஞர் குணசேகரன் கணேசன் நடித்து வருகிறார்.

இந்த குறும்படத்தில் நடித்துள்ள அத்தனை கலைஞர்களும் புதுமுகங்கள். இதன் இயக்குநர் எஸ்.அஸ்வின், இசையமைப்பாளர் கதிஸ்வன், தயாரிப்பாளர் சிவராம் ஆகியோர் கலைத்துறைக்கு புதியவர்கள் என்று இந்த குறும்படத்தில் முக்கிய வேடத்தில் பிரதான கலைஞராக நடித்துள்ள குணசேகரன் கணேசன் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த குறும்படத்தில் நடித்துள்ள மெய்நிலன் தமிழ் செல்வன், எஸ். அஸ்வின், குகன், சரண்யா ஸ்ரீ, ஹரிபிரசாத், கிஷன் ஆகியோர் கலை உலகிற்கு புதியவர்கள்.

 இதன் இயக்குநர் எஸ். அஸ்வின் தமனி திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இந்த குறும்படத்தில் நடித்துள்ள குணசேகரன் கணேசன் 'நான் கபாலி அல்ல' நாடகத்தில் நடித்திருந்தார். இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராக இருந்துள்ளார். தேசம் ஊடகம் வழங்கிய பொங்கல் நிகழ்ச்சி, பிரமுகர் நேர்காணல் போன்ற நிகழ்ச்சிகளில் அறிவிப்பு தொகுப்பாளராக செயல்பட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு
தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருது பெறும் குறும்படமாக அமையும் என்று குறும்பட தயாரிப்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Comments