மலாக்காவில் இரண்டாவது மந்திரம் ஓதும் நிகழ்ச்சி

மலாக்காவில் இரண்டாவது மந்திரம் ஓதும் நிகழ்ச்சி

மலாக்கா, மே 20-
மந்திரம் ஓதும் நிகழ்ச்சி இரண்டாவது முறையாக மலாக்காவில் நடைபெற்றது.
இந்திய மாணவர்கள் வன்முறைப் பாதையில் இருந்து விடுபடவும் தங்களின் வாழ்க்கையில் நன்னெறியை அவர்கள் கடைப்பிடிக்கவும் முன்னேற்றம் காணவும் மந்திரம் ஓதும் முறை மிகவும் துணை நிற்கும் என்பதாலும் இளம் பருவத்திலேயே தாங்கள் பாரம்பரியமிக்க இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அழுத்தமாக இளைஞர்கள் மற்றும் இளம் மாணவர்கள் மனதில் பதிய வைக்கவும் மந்திர உபதேசமும் மந்திர உச்சரிப்பும் துணை நிற்கும் என்பதன் அடிப்படையில் மந்திரம் ஓதும் நிகழ்ச்சி மே 19 ஞாயிற்றுகிழமை காலையில் மலாக்கா இராமகிருஷ்ண ஆசிரமத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இராமகிருஷ்ண ஆசிரமப் பொறுப்பாளர் சுவாமி முரளி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

மித்ரா ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அ.ப.முத்துக்குமார சிவாச்சாரியார் மாணவர்களுக்கு மந்திர உபதேசம் செய்தார். சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதன், பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் சிறப்பு அதிகாரி சே.இராஜமோகன், குருஜி சக்தி பிரியானந்தா, மலாக்கா மாநில கல்வித்துறை தமிழ்ப் பிரிவு மேற்பார்வையாளர் முருகையா, இராமகிருஷ்ண ஆசிரமத் தலைவர் சுவாமி பாலமுரளி, தெலுக் இந்தான் ஸ்ரீ ஞானானந்த சங்கீர்த்தன மண்டலியைச் சேர்ந்த ஸ்ரீ பகவான் ஜி, ஸ்ரீ தில்லை காளியம்மன் குடிலைச் சேர்ந்த ஸ்ரீ இராஜன் சுவாமி, மலேசிய இந்து சங்க ஆலோசகர் டாக்டர் நாசியப்பன் ஆகிய பிரமுகர்களுடன் பள்ளி ஆசிரியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தங்கள் வட்டாரத்திலும் மந்திரம் ஓதும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி அதிகமானவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சுவாமி பாலமுரளி, முத்துக்குமார சிவாச்சாரியார், இராஜமோகன், மித்ரா துணை இயக்குநர் மகாலிங்கம் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.

Comments