சிலாங்கூர் முதியவர் இறப்புநிதி! அந்நாள் மந்திரி புசார் வழங்கியதை இந்நாள் மந்திரி புசார் பறித்துக் கொண்டது ஏன்? பிரதமர் துன் மகாதீர், துன் டைம் ஜைனுடின், சிலாங்கூர் மந்திரி புசாரிடம் அரசு சாரா இயக்கங்கள் மகஜர் -நாம் தமிழர் இயக்கத் தலைவர் கலைமுகிலன் தகவல்

சிலாங்கூர் முதியவர் இறப்புநிதி!
அந்நாள் மந்திரி புசார் வழங்கியதை இந்நாள் மந்திரி புசார்  பறித்துக் கொண்டது ஏன்?
பிரதமர் துன் மகாதீர், துன் டைம் ஜைனுடின், சிலாங்கூர் மந்திரி புசாரிடம் அரசு சாரா இயக்கங்கள் மகஜர்
-நாம் தமிழர் இயக்கத் தலைவர் கலைமுகிலன் தகவல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 10-
அந்நாள் சிலாங்கூர் மந்திரி புசார் வழங்கிய முதியவர் இறப்பு நிதியை இந்நாள் மந்திரி புசார் அமிருடின் ஷாரி  பறித்துக் கொண்டது ஏன் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் கலைமுகிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சிலாங்கூர் மாநில அரசு கடந்த 11 ஆண்டுகளாக 60 வயதை தாண்டிய மரணத்தை தழுவும்  முதியர்களுக்கு 2,500 வெள்ளி  இறப்பு உதவிநிதி வழங்கி வந்தது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், பணமில்லை என்ற காரணத்தை காட்டி கடந்த மாதம் அந்நிதியை நிறுத்துவதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார். இம்முடிவு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக செந்தூலில் அரசு சாரா இயக்கங்கள் சார்பில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலைமுகிலன்  தெரிவித்தார்.

இந்த இறப்பு நிதிக்கு பதில் 2 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு 100 வெள்ளி பெருநாள் காலத்தில் வழங்கப்படும் என்று மந்திரி புசார் கூறியிருப்பது காலத்நிற்கு ஏற்புடயதல்ல. ஒருவர் இறந்த பிறகு வழங்கப்படும் இறப்பு நிதி 2,500 வெள்ளிக்கும் அதே நபர் உயிரோடு இருக்கும் போது ஆண்டுக்கு 100 வெள்ளி வழங்குவதற்கும் அதிக இருக்கிறது. இந்த உதவி நிதியை மாதம் ஒருமுறை வழங்கியிருந்தாலும் பரவாயில்லை. ஆண்டுக்கு 100 வெள்ளி என்பது கொடுமையிலும் கொடுமை என்றார் கலைமுகிலன்.

நாட்டில் வளமிக்க மாநிலங்களில் சிலாங்கூர் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் மாநில அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறுவது ஏற்புடைய விஷயமல்ல. கடந்த 2008இல் மாநில அரசாங்கம் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கைவசம் வந்த பிறகு அப்போதைய மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.

அதன்பிறகு வந்த மந்திரி புசார் அஸ்மின் அலியும் பல சலுகைகளை அறிவித்தார். அவையெல்லாம் இந்நாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் வேளையில் தர போதைய மந்திரி புசார் அமிருடின் ஷாரி பல சலுகைகளை பறிக்க முயல்கிறார். அதில் 2,500 வெள்ளி இறப்பு நிதி ரத்து செய்யப்பட்டுள்ளதானது ஏழை மக்களுக்கு பேரிழப்பாகும் என்று கலைமுகிலன் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார அமிருடின் ஷாரி, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், அரசு உயர் ஆலோசனை மன்றத் தலைவர் துன் டைம் ஜைனுடின் ஆகியோரிடம் மே 13 திங்கட்கிழமை மகஜர்
வழங்கப்படும் என்று   கலைமுகிலன் கூறினார்.

Comments

Post a Comment