பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மண்ட் நிலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்கள் நலனில் அக்கறை காட்டுகிறது தேசம் வலைத்தளத்திற்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சிறப்புப் பேட்டி

பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மண்ட் நிலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்கள் நலனில் அக்கறை காட்டுகிறது
தேசம் வலைத்தளத்திற்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சிறப்புப் பேட்டி

குணாளன் மணியம்

பத்துகேவ்ஸ், மே 5-
பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மண்ட் நிலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளதாக
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்
டத்தோ அமிருடின் ஷாரி தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு இந்தியன் செட்டில்மண்ட் நிலப்பிரச்சினை ஒரு சான்று. இந்தியன் செட்டில்மண்ட் பிரச்சினை பல ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் சிலாங்கூர் மாநில நம்பிக்கை கூட்டணி அரசு இந்தியன் செட்டில்மண்ட் பிரச்சினைக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில்  நிரந்தர தீர்வு கண்டுள்ளதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்தியன் செட்டில்மண்ட் நிலப்பிரச்சினைக்கு கடந்த 2009ஆம் ஆண்டு படிப்படியாக தீர்வு காணப்பட்டு 80 விழுக்காடு பூர்த்தியடைந்த நிலையில் மீதமிருந்த 20 விழுக்காடு நிலப்பிரச்சினைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நிரந்தரமாக தீர்வு காணப்பட்டுள்ளதாக பத்துமலை, தாமான் செலாயாங்கில் இன்று மே 5 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தேசம் வலைத்தளத்திடம் மந்திரி புசார் அமிருடின் ஷாரி அவ்வாறு சொன்னார்.

சுங்கை துவா சட்டமன்ற அலுவலகம் மூலம் 30 முதல் 40 விழுக்காடு நிதியுதவி, பொருளுதவி சுங்கை துவா இந்திய மக்களுக்கு குறிப்பாக பத்துகேவ்ஸ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. இந்திய மக்கள் மீது பரிவு காட்டுகிறோம்.


அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பத்துமலை தைப்பூச திருவிழாவில் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்திற்கான இத்தகைய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.Comments