சமூகப் பணியாக மாணவர்களுக்கு "இலக்கை நோக்கி" வழிகாட்டும் கவிமாறன் எழுச்சி உரையில் மாணவர்களை கவர்ந்தார்

சமூகப் பணியாக மாணவர்களுக்கு "இலக்கை நோக்கி" வழிகாட்டும் கவிமாறன்
எழுச்சி உரையில் மாணவர்களை கவர்ந்தார்

சிரம்பான், மே 28-
கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு சமூகப் பணியையும் மேற்கொண்டு வருகிறார் ராகா அறிவிப்பாளர் கவிமாறன்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

பணம் சம்பாதித்தால் போதும் என்று சுயநலத்தில் இருக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை மக்களுக்கும் சமுதாயத்திற்கும் செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள கவிமாறன் அண்மையில் சிரம்பான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் சமூகப் பணியை மேற்கொண்டார்.

சிரம்பான தோட்டத் தமிழ்ப்பள்ளி,  சிரம்பான் தத்துவமசி இயக்கம் ஏற்பாட்டில் "இலக்கை நோக்கி" மாணவர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில்  "நல்லொழுக்கமும் விவேக கல்வியும்" எனும் தலைப்பில் ராகா அறிவிப்பாளர் கவிமாறன் எழுச்சி உரையாற்றினார்.இலவசமாக நடைபெற்ற இந்த "இலக்கை நோக்கி" கருத்தரங்கில் கவிமாறன் கிட்டத்தட்ட 3 மணிநேரம் தன் எழுச்சிப் உரையில் மாணவர்களை தன்வசப்படுத்தினார்.
கவிமாறன் உரையை செவிமடுத்த சிலருக்கு சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  4,5,6ஆம் ஆண்டு மாணவர்கள் பலனடைந்தனர்.  ராகா கவிமாறன் பேசினை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments