மஇகா தலைமைச் செயலாளராக டத்தோ அசோஜன் நியமனம்! நிர்வாக செயலாளர் ராமலிங்கம் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் நியமன கடிதங்களை வழங்கினார்

மஇகா தலைமைச் செயலாளராக டத்தோ அசோஜன்  நியமனம்!
நிர்வாக செயலாளர் ராமலிங்கம்
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் நியமன கடிதங்களை வழங்கினார்

குணாளன் மணியம்

கோலாலம்பூர் மே 27-
ம.இ.காவின் தலைமைச் செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதன்  தலைமை செயலாளராக டத்தோ அசோஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ம.இ.கா நிர்வாக செயலாளராக பணியாற்றி வந்த ஜொகூர் மாநில தலைவரான டத்தோ அசோகன் 2018 பொதுத்தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில்  கட்சியின் தலைமை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்நிலையில் டத்தோ அசோஜன் வகித்து வந்த நிர்வாக செயலாளர் பதவிக்கு ஏ.கே.ராமலிங்கம்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்.

ம.இ.காவின் தலைமைச் செயலாளர் பதவியை டத்தோஸ்ரீ வேள்பாரி வகித்து வந்தார். அவர் அப்பதவியை ராஜினாமா செய்த பிறகு அப்பதவி காலியானது. மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வில் டத்தோ அசோஜன், ஏ.கே.ராமலிங்கம்  இருவருக்கும் உறுதி கடிதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்  டத்தோஸ்ரீ வேள்பாரி, உச்சமன்ற உறுப்பினர்கள், ம.இ.கா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

Comments