ஷாலினி பாலசுந்தரம்-ஷைலா நாயர் இணையின் "புலனாய்வு"! நான்கு மாதங்களில் திரையை எட்டவிருக்கிறது

ஷாலினி பாலசுந்தரம்-ஷைலா நாயர் இணையின் "புலனாய்வு"!
நான்கு மாதங்களில் திரையை எட்டவிருக்கிறது

குணாளன் மணியம்
படங்கள் : ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், மே 6-
ஷாலினி பாலசுந்தரம்-ஷைலா நாயர் இணையின் புலனாய்வு திரைப்படம் மூன்று, நான்கு மாதங்களில் திரையை எட்டவிருக்கிறது. பீனிக்ஸ் தாசன், யுவாஜி இருவரும் பாடல் எழுதியிருக்கும் "புலனாய்வு" திரைப்படம் காவல் துறை சம்பந்தப்பட்ட படமாக இருப்பதால் அது குற்றச்செயல் தொடர்புடைய படமாக இருக்கும் என்று அறியப்படுகிறது.

கீதையின் ராதை, திருடாதே பாப்பா திருடாதே, இரயில் பயணங்களில் திரைப்பட வெற்றிக்குப் பிறகு "புலனாய்வில்" இறங்கியுள்ளார்.  

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஷாலினி பாலசுந்தரம் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியில் இருந்த ரசிகர்களுக்கு "புலனாய்வு" திரைப்படத்தின் மூலம் பதில் அளித்திருக்கிறார் ஷாலினி பாலசுந்தரம்.

நாட்டின் பிரபல பாடகி டத்தின்ஸ்ரீ ஷைலான நாயருடன் இணை சேர்ந்துள்ளார் ஷாலினி பாலசுந்தரம். இந்த "புலனாய்வு" திரைப்பட பெயர் அறிமுக விழா இன்று மே 6 பிற்பகல் 2.00 மணிக்கு ஹர்த்தாமாஸ் டோசர்ட் தங்கு விடுதியில் அஜெண்டா சூரியா நிறுவனத்தின் தலைவர் ஜெகராவ் தலைமையில் நடைபெற்றது. 
இத்திரைப்படத்தில் நடித்துள்ள கே.எஸ்.மணியம், ஷாலினி பாலசுந்தரம், ஷைலா நாயர், சி.குமரேசன், சசிதரன், கபிலன், இர்ஃப்ன், ஷாபி, கிர்த்திகா, சரண்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

"புலனாய்வு" திரைப்படம் குறித்து ஷாலினி பாலசுந்தரம், சி.குமரேசன், கதாநாயகன் கபிலன், இசையமைப்பாளர் ஜெய் ராகவேந்திரா உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகளை தேசம் வலைத்தளத்திடம் பகிர்ந்து கொண்டனர். (விரிவான பேட்டி தொடரும்)

Comments