சியாம் புத்தாண்டிற்கு பொது விடுமுறை ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தகவல்

சியாம் புத்தாண்டிற்கு பொது விடுமுறை
ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தகவல்

புத்ராஜெயா, மே 10-
மலேசியாவில் சயாம் மொழி பேசும் தாய் சமூக மக்களுக்கு புத்தாண்டு(சொங்ரான்) விடுமுறை வழங்குவதற்கு மத்தியக் கூட்டரசு இசைவு தெரிவித்துள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ஆவது வார நிறைவு அல்லது மூன்றாவது வாரத் தொடக்கத்தில் கொண்டாடப்படும் சொங்ரான் விடுமுறை, பதிவு செய்யப்படாத விடுமுறையாக அடுத்த ஆண்டு(2020) முதல் நடைமுறைக்கு வருகிறது. எனவே, தாய் வம்சாவளியினர் தங்களின்  முதல் புத்தாண்டு பொது விடுமுறையை வரும் ஆண்டில் ஏப்ரல் 13-ஆம் நாளில் கொண்டாடவிருக்கின்றனர்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

நம்பிக்கைக் கூட்டணி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதைப் போல, நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும், சிறுபான்மைச் சமுதாயத்தினராக இருந்தாலும் தத்தம் பாரம்பரிய திருநாளையும் பண்டிகைகளையும் கொண்டாடி நாட்டில் நிலவும் நல்லிணக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கப்படும் என்றக் கூற்று மெய்ம்பிக்கப்படுகிறது என்று ஒற்றுமைத் துறை அமைச்சருமான அவர், இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments