கராத்தே தற்காப்பு கலை ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கும் பிளேக் பேல்ட் வழங்கும் நிகழ்வில் மாஸ்டர் ஆறுமுகம் உரை

கராத்தே தற்காப்பு கலை ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கும்
பிளேக் பேல்ட் வழங்கும் நிகழ்வில் மாஸ்டர் ஆறுமுகம் உரை

குணாளன் மணியம்

ரவாங், மே 7-
கராத்தே தற்காப்பு கலை ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கும் என்று ரவாங் இத்தோசு ரூயோ கராத்தே பயிற்சி மையத் தலைவர் ஆறுமுகம் கூறியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்திய மாணவர்கள் பலர் தீய வழிக்கு செல்வதை கராத்தே தற்காப்பு கலை முற்றாக தடுக்கும். அதேநேரத்தில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க வழிவகை செய்யும் என்று ரவாங்கில் மாணவர்களுக்கு கருப்பு பட்டி
(பிளேக் பேல்ட்) வழங்கும் நிகழ்வில் மாஸ்டர் ஆறுமுகம் தேசம் வலைத்தளத்திடம் அவ்வாறு தெரிவித்தார்.என் குடும்கத்தில் என் மனைவி கராத்தே மாஸ்டர். என் மகள், மகன் இருவரும் கராத்தே கலையில் முதல் படி கருப்பு பட்டையை பெற்றுள்ளனர். இது அவர்களை முற்றாக மாற்றியமைத்துள்ளதாக ஆறுமுகம் தெரிவித்தார்.ரவாங் கராத்தே சென்டரில் கடந்த 20 ஆண்டுகளில் நூறுக்கும் மேற்பட்ட மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறேன். இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். கராத்தே தற்காப்பு கலை கராத்தே வகுப்பு நடத்துவதன் வழி பொருளாதாரத்தையும் ஈட்டித் தரும் என்பதால் மாணவர்கள் கராத்தே கலை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று ஆறுமுகம் சொன்னார்.


இந்த நிகழ்வில் 22 மாணவர்களுக்கு கருப்பு பட்டை சான்றிதழ் வழங்கப்பட்டன. இதனை மாஸ்டர்கள் எடுத்து வழங்கினர். இதில் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். அதேவேளையில் மாணவர்கள் பலரும் கராத்தே பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.


இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள் என்று 120 பேர் கலந்து கொண்டனர். கராத்தே கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்கள்
கீழ்க்காணும்  எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆறுமுகம் - +60 12-368 9647Comments