உழைக்கும் தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்தாக இருப்போம் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தொழிலாளர் தின வாழ்த்து

உழைக்கும் தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்தாக இருப்போம்
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தொழிலாளர் தின வாழ்த்து

கிள்ளான், மே 1-
உழைக்கும் தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்தாக இருப்போம் என்று
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

 ADVERTISEMENT

எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில்  பல தொழிலாளர்கள் தங்கள் உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்தாக நாம் இருக்க வேண்டும். இதற்கு இந்நாள் நன்னாளாக அமைய வேண்டும் என்று குணராஜ் தெரிவித்தார்.

உலகையும் நாட்டையும் மக்களையும் குடும்பத்தையும் வாழ வைக்க உழைத்திடும் உன்னதக் கரங்கள் தொழிலாளர்கள். இந்த உலகம், உழைக்கும் தொழிலாளர்கலா வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. உழைப்புக்கு சொந்தமான தொழிலாளர்களின்  பெருமையையும், சிறப்பினையும் நாம் எப்போதும் போற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குணராஜ் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments