மலேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனுக்கு தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் எழுச்சி மன்றம் பாராட்டு

மலேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனுக்கு தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் எழுச்சி மன்றம் பாராட்டு

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

புதுக்கோட்டை, மே 26-
மலேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனுக்கு தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் எழுச்சி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

தமிழ் மொழிக்காக செவ்வனே சேவையாற்றிவரும் முன்னாள் பினாங்கு காவல்துறை துறை டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் சேவை போன்றத்தக்கது.

கடந்த 1977ஆம் ஆண்டு மஇகா தலைமையகத்தில் அலுவலகப் பையனாக, பணிபுரிந்த தெய்வீகன், மலாயாப் பல்கலைக்கழகத்திலும், இங்கிலாந்து நோட்டிங்ஹம் பல்கலைக் கழகத்திலும் பயின்று முதுகலைப் பட்டம் பெற்று, காவல் துறையில் கமிஷனர் பதவி வரை உயர்ந்து, தமிழ்ப் பேரவையின் தலைவராகப் பணியாற்றி இன்று மலேசியத்  தமிழ்மொழியகத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துவது, பெருமகிழ்ச்சி தருகின்றது.

ஒரு தமிழ்ப்பள்ளி மாணவன், தன் உழைப்பால் இந்த அளவிற்கு உயர்ந்து, டத்தோஸ்ரீ பட்டம் பெற்று, தமிழையும், தமிழர்களையும் மறவாமல்,  சமுதாயத் தொண்டு செய்வதைக் காணுகின்ற நம் இளைஞர்களுக்கு, வேறென்ன முன்னுதாரணம் வேண்டும்?
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.

Comments