ஓயாது உழைத்திட்ட போராளி, இவன் மாறாது மறையாது வரலாராய் நிலைத்திட தடைகற்கள் ஏனோ?

ஓயாது உழைத்திட்ட போராளி,
இவன் மாறாது மறையாது வரலாராய் நிலைத்திட  தடைகற்கள் ஏனோ? 

பினாங்கு, மே 8-
நம் நாட்டில் பத்து வருடமாக
எந்தவொரு இடத்திலும் சாலைகளே அமைக்கலையா? இல்லை இந்தியர் என்பதால் சாலையொன்றுக்கு பெயரிட
மனம் வரலையா என்று ஐபிஎப் உத்தாமா தேசியத் தலைவர்
முவீ.மதியழகன் கேள்வி எழுப்பினார்.

யார் யாருக்கெல்லாமோ சுடச்சுட,
திடீர் திடீரென பெயர்ச்சூட்டி கைதட்டலை பெற்றிட்ட அரசாங்கம் பொதுச்சேவகன் மக்கள் தொண்டன் வீ.டேவிட்டுக்கு பெயர் வைப்பதில் ஏன் வாஞ்சம் என்று முவீ.மதியழகன் கேட்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஒருநாள் கூத்துக்கு மீசை வைத்த கதைபோல சிலாங்கூரில் மாநிலத்தில் சாலை ஒன்றுக்கு மக்கள் தொண்டன் வீ.டேவிட்டின் பெயரை சூட்டி,
அதனை ரத்து செய்து மீட்டுக்கொண்ட துயரமொன்று வலியாகி வந்துபோய் மறந்துபோன வரலாறும் உண்டு,

அன்று தேசிய முன்னணி
நடுவன் அரசின் மீது பழிபோட்டு குற்றஞ்சாட்டிய எதிர்க் கட்சியினரே,
இன்றய ஆளும் கட்சியாகி நாடாளும் அரசாங்கமாக ஓராண்டை தொட்விட்ட காலத்திலும்  போராட்டவாதி வீ.டேவிட்டின் பெயர்ச் சொல்லிட சாலையா இல்லை?

அரசியல், சமூகம், கல்வி, மனிதவளம், மனிதபிமானம் இவற்றுக்கான போராட்டவாதி மரியாதைக்குறிய
மக்கள் தொண்டன் வீ.டேவிட் அவர்கள்,

மே திங்கள் முதல் நாள் உழைப்பாளர் தினத்தில் மென்று தின்ன அசைபோடும்
ஒரு போராளியின் வரலாற்று பதிவாகவே வருடா வருடம் நினைவுக்கூறும் பதிவாக உள்ளது வீ.டேவிட்டின் நினைவுகள்,

மே திங்கள் முதல்நாள் உழைப்பாளர் தினத்தன்று பொதுவிடுமுறை கேட்டு உழைப்போர்க்கு மதிப்பைத்தர தட்டிக் கேட்டவரும், அவ்விடுமுறையை பெற்றும் தந்தவர் வீ.டேவிட்.

அடுத்தடுத்து வரும் ஆண்டில்
மீண்டும் மீண்டும் நினைவுக்கூற
மீண்டும் மே மாத ஊலா,
மீண்டும் அதே பல்லவி என்பது ஒருபக்கம் இருக்க இன்னமும் அவருக்காக பிரகடனம் செய்திட்ட சாலை எங்கே?

உழைப்போர்க்கு ஊக்க மருந்துபோல உற்சாகம் தந்தவர் மட்டுமல்ல
பசித்தவர்க்கு பசிபோக்க நிரந்தர தீர்வை கண்ட போராட்டவாதி வீ.டேவிட்,
மலேசிய நாடளுமன்றம் அதிர ஓங்கி
குரல் எழுப்பி உலக புகழ்பெற்றவர் தொழிர்சங்கவாதி வீ.டேவிட்.

மலேசிய அரசியல் வரலாற்றில்
மிக சக்திவாய்ந்த இந்தியர் சமூக அரசியல்வாதி இவருக்கு நிகர் இவரே, இவரிடத்தை எவரும் பிடித்தாரில்லை
இன்று அரசியல் தளத்தில்,
களம் காணும் தலைவர்கள் மக்கள் தொண்டன் வீ.டேவிட்டை படித்தால்
சமூகம் நன்மைபெறும்
அரசியலும் மரியாதை பெறும்.

ஒரு போராளியின் நினைவை
நிலைநிறுத்தி அவற்றை
அடுத்த தலைமுறை நகர்வுக்கு கொண்டு சேர்க்கும் பணிக்கு இன்றய அரசும்,
இந்திய அமைச்சர்களும் துணிந்து குரல் எழுப்பி மக்கள் தொண்டன் வீ.டேவிட்டின் பெயரை சாலைக்கு இட்டாக வேண்டும் என்பது அரசாங்கத்தின் கடனாகும் என்று
முவீ.மதியழகன் வலியுறுத்தினார்.

Comments