வாகனங்களுக்கு கருப்பு நிற கண்ணாடி புதிய விதிமுறை பாதுகாப்மை தராது -பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை

வாகனங்களுக்கு கருப்பு நிற கண்ணாடி
புதிய விதிமுறை பாதுகாப்மை  தராது
-பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை

மு.வ.கலைமணி

பினாங்கு, மே 10-வாகனங்களுக்கு கருப்பு நிற கண்ணாடி தொடர்பான புதிய விதி பாதுகாப்பை தராது என்று பினாங்கு பயனீட்டாலர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சரின் இந்த புதிய விதிகள் தங்கலுக்கு அதிர்ச்சியை தருவதாக பி.ப.சங்க தலைவர் எஸ்.எம் முகம்மது இத்திரிஸ் கூரினார்.

மற்ற சாலை போக்குவரத்து இயக்கங்களின் கருத்துக்களை செவிமெடுக்காமல், இந்த புதிய விதி ,சாலை பாதுகாப்பை சரிசெய்து விடமுடியாது.

வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக, வாகனங்களின் கண்ணாடி இருட்டாக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுகொண்டதாக அமைச்சர் கூறுகிறார். பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், பொதுமக்களின் ஆசையை போக்குவரத்து அமைச்சு தீர்த்து வைத்துள்ளார்.

நமது நாடு உலகளாவிய அளவில் மிக மோசமான சாலை பாதுகாப்பு முறைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 500,000 விபத்துக்கள், 7,000 மரணங்கள், 9 பில்லியன் வெள்ளி செலவு. இந்த எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. இப்பொழுது இந்த புதிய  கண்ணாடி விதிமுறை மேலும் பிரச்சினை தரும் என்றார் இத்திரிஸ்.

கருப்பு கண்ணாடி கூடுதலான விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காருக்கு பின்னால் கருப்பு கண்ணாடி இருந்தால், காருக்கு பின்னால் வரும் வாகனத்தை, காரை ஓட்டி வருபவரால் பார்க்க முடியாது. ஆக பின்னால் வரும் வாகனம் முன்னால் செல்லும் வாகனத்தை மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதுவும் இரவு நேரங்களில் இது மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த புதிய விதி, ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் கார்களின் பிரச்சனைகளை குறைக்கும் என்கிறார் அமைச்சர்.

இந்த கூற்று வேடிக்கையாக இருக்கிறது. நாம் கார்களை இறக்குமதி செய்தால், அது மலேசிய சட்டத்தை பின்பற்றி இருக்க வேண்டும். நமது கார், வலது பக்கம் ஓட்டுவதாக உள்ளது. அதை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா?
இருட்டறை திருடர்களுக்கு சொர்க்க வாசல். கடத்தல், கற்பழிப்பு, திருட்டு ஆகியவை அதிகரித்து வருகின்றன. இந்த நேரத்தில் வாகனம் ஏன் இருட்டாக்கப்பட வேண்டும்.

ஆகவே, கார் கண்ணாடி மேலும் கருப்பாக கொண்டுவரப்பட்ட விதி மீட்டுக் கொள்ள படவேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்வதாக இத்திரிஸ் தெரிவித்தார்.

Comments