கிள்ளான் மக்கள் ஆறாவது நாளாக தண்ணீ்ர் இன்றி தவிப்பு! நீர்,நிலம், இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கிள்ளான் மக்கள் கேள்வி

கிள்ளான் மக்கள் ஆறாவது நாளாக தண்ணீ்ர் இன்றி தவிப்பு!
நீர்,நிலம், இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கிள்ளான் மக்கள் கேள்வி

குணாளன் மணியம்

கிள்ளான், மே 9-
கிள்ளான் மக்கள் ஆறாவது நாளாக தண்ணீ்ர் இன்றி தவிக்கும் நிலையில்
நீர்,நிலம், இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று
பாதிக்கப்பட்ட கிள்ளான் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மண்சரிவில் நீர் குழாய் உடைந்து நீர் தடைப்பட்டது இயற்கை பேரிடராக இருந்தாலும் மக்கள் பயன்பாட்டுக்கு நீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டியது நீர்வள அமைச்சராக இருக்கும் அமைச்சர் சேவியர் ஜெயகுமாரின் கடமையாகும். ஆனால், இன்று வரை  அவர் வாய்திறக்காமல் இருக்கிறார்எ கிள்ளான் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சிலாங்கூர் மாநிலத்தில் இல்லாத தண்ணீர் வண்டியா? சேவியர் நினைத்திருந்தால் பல வண்டிகளை அனுப்பியிருக்கலாம். அதேநேரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து குழாய் வண்டிகளை அனுப்பியிருக்கலாம். இப்படி செய்திருந்தால் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்க மாட்டார்கள். ஆனால், சிலருக்கு மட்டும் தண்ணீர் சென்றுள்ளது. பலருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.  ஆகையால், சேவியர் என்ன செய்தார் எனும் கேள்வி எழுந்துள்ளது.சேவியர் நீர் வள அமைச்சர். தனது அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி தீயணைப்பு படை வண்டியின் உதவியுடன்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் விநியோகம் செய்ய உத்தரவிட்டிருக்கலாம். இது தொடர்பில் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் ஜுராய்டா கமாருடினுடன் கைப்பேசி அழைப்பில் தொடர்பு கொண்டு தீயணைப்பு வண்டியை அனுப்பச் சொல்லி மக்களுக்கு குடிநீர் அனுப்பச் சொல்லியிருக்கலாம். ஆனால், சேவியர் அவர் வீட்டுக்கு மட்டும் நீர் அனுப்பச் சொல்லி மக்களை மறந்து விட்டார் என்று கிள்ளான் வட்டார மக்கள் குற்றஞ்சாட்டினர்.

நீர் வள அமைச்சருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்று சம்பந்தப்பட்டவர்கள் கேள்வி எழுப்பலாம். தண்ணீர்  ஷபாஸ் நிறுவன கட்டுப்பாட்டில் இருந்தாலும் அமைச்சர் சேவியர் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் சேவியர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்திருக்கலாம். ஆனால், அவர் வாய்மூடிய மௌனசாமியாராக இருப்பதாக மக்கள் சாடினர்.
கிள்ளான் மக்கள் வரலாறு காணாத அளவில் 6 நாட்கள் தண்ணீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். நுனிப்புல் மேய்வது போல வேண்டியவர்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. சாதாரண மக்களுக்கு தண்ணீர் இல்லை. என்ன செய்யப் போகிறார் சேவியர் ஜெயகுமார்.

பந்திங்-தைப்பிங் கிழக்குக்கரை நெடுஞ்சாலையில் நீர்க்குழாய் பழுதடைந்ததால் கிள்ளான் செந்தோசா, அண்டலாஸ், கம்போங் ஜாவா, கம்போங் டோலேக், தாமான் டேவான், ஜாலான் இஸ்தான, ஜாலான் தெங்கு கிளான, கிள்ளான் துங்கு அம்புவான் மருத்துவமனை உள்ளிட்ட ஒட்டு மொத்த கிள்ளான் வட்டாரம் 6 நாட்களாக தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments