பாலியல் தொல்லை விவகாரம் தாமாக உதவி செய்ய முன் வந்தார்! உரிமையை எடுத்துக் கொள்ள முயன்றார்! தோல்வியின் எதிரொலியாக பழி போடுகிறார் -சுங்கை சிப்புட் எம்பி எஸ்.கேசவன்

பாலியல் தொல்லை விவகாரம்
தாமாக உதவி செய்ய முன் வந்தார்!
உரிமையை எடுத்துக் கொள்ள முயன்றார்!
தோல்வியின் எதிரொலியாக பழி போடுகிறார்
-சுங்கை சிப்புட் எம்பி எஸ்.கேசவன்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 19-
பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயரை கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பெண்
தாமாக உதவி செய்ய முன் வந்து உரிமையை எடுத்துக் கொள்ள முயன்ற, அது
தோல்வியில் முடிந்ததால் இப்போது பழி போடுவதாக
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் விளக்கமளித்துள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த பாலியல்  குற்றச்சாட்டு, பெயரை கெடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகாரம் காட்டியது, நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அடம்பிடித்தது, அரசாங்க அதிகாரிகளிடம் அதிகாரம் காட்டியது, வீடு வரை உரிமையை நிலைநாட்ட முற்பட்டது உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் வழி சம்பந்தப்பட்ட பெண்ணின் தீய நோக்கம் வெளிப்பட்டதாக எஸ்.கேசவன் தெரிவித்தார்.

என் மீதான பாலியல்  குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன். இது என் பெயரை கெடுக்கும் முயற்சியாகவே கருதுகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்தலில் உதவுவதற்காக அந்த பெண்மணி என்னை  தொடர்பு கொண்டார். அதன்பிறகு உரிமையை வளர்த்துக் கொண்டு குடும்பத்தோடு நெருக்கமானார். இந்த சூழலில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முற்பட்டதால் தொகுதி அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மத்தியில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குடும்ப விவகாரத்திலும் தலையீடு இருந்தது என்று கேசவன் சொன்னார்.

இந்த பாலியல் தொல்லை விவகாரம் ஒரு பழி தீர்க்கும் படலம்.  பெயரை கெடுக்கும் முயற்சி. இது குறித்து காவல் துறையில் புகார்  செய்யப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணை நடத்தட்டும் என்று எஸ்.கேசவன் குறிப்பிட்டார்.

Comments